வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கு 14ம் திகதி அடிக்கல்!

135

 

வடக்கின் அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கலை எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டவுள்ளதாக துறைமுக பெருந்தெருக்கள் கப்பற்துறை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார். 14ம் திகதி காலை 9.30 மணிக்கு வடக்கின் அதிவேகப் பாதை யின் செங்க டகல வாயிலை கலகெதர விலும் முற்பகல் 10.30 மணிக்கு ரம்புக்கணையிலும் பிற்பகல் 2 மணிக்கு கலேவெல வாயிலிலும் அடிக்கல் நடப்படும்.15ம் திகதி காலை 9.30 மணிக்கு குருநாகல் எதுகல் பிரவேசவாயிலின் அபிமன் வாயிலுக்கு அருகிலும் அடிக்கல் நடப்படவுள்ளது. இப்பாதை நிர்மாணிக்கப்பட்ட பின் கொழும்பிலிருந்து கண்டிக்கும் கொழும்பிலிருந்து தம்புள்ளைக்கும் ஒன்றரை மணி நேரத்தில் பயணிக்க முடியும்.

SHARE