குறை­பா­டுகள் எங்கும் இருக்­கலாம். ஆனால் குறை­பா­டுகள் குறித்து பேசிக் கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க வேண்டும்!- பசில் ராஜபக்ச அழைப்பு

161

basilவரும் ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆத­ரவளிக்க வேண்டும். இவ்­வாறு ஆத­ரவளிப்பதன் மூலம் கூட்­ட­மைப்பு அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும் என்று பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சர் பசில் ராஜபக்ச தெரி­வித்தார்.

அந்த வகையில் தனது நேர்­மையை வெளிக்­காட்­டு­வ­தற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்  தெரி­வித்தார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இது­வரை எந்த வழி­யிலும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவிற்கு எந்­த­வொரு உத­வி­யையும் செய்­ய­வில்லை. அர­சியல் ரீதி­யா­கவோ, இரா­ஜ­தந்­திர ரீதி­யா­கவோ கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­திக்கு இது­வரை உத­வி­ய­தில்லை. எனவே எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலை ஒரு சந்­தர்ப்­ப­மாக பயன்­ப­டுத்தி கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­திக்கு ஆத­ரவு வழங்­கு­மென்று நம்­பு­கின்றோம் என அவர் குறிப்­பிட்டார். எதிர்­வரும் 2015ம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் நடை­பெ­ற­வுள்­ள­தாக பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­படும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அமைச்சர் பசில் ராஜபக்ச இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆத­ரவை வழங்­கு­வதன் மூலம் தமது நேர்­மையை வெளிக்­காட்­டு­வ­தற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கு சிறந்த சந்­தர்ப்பம் ஒன்று கிடைத்­துள்­ளது. அதன்­படி தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­திக்கு சாத­க­மான ஒரு சிறந்த தீர்­மா­னத்தை எடுக்­கு­மென்று நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம். கடந்த காலம் முழு­வதும் த.தே. கூட்­ட­மைப்பு தவ­றான தீர்­மா­னங்­க­ளையே எடுத்­தது. ஒரே ஒரு சந்­தர்ப்­பத்தில் மட்­டுமே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­விற்கு கூட்­ட­மைப்­பினர் ஆத­ரவு தெரி­வித்­தனர். அந்த சந்­தர்ப்­பத்தில் சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க வர­லாற்று ரீதி­யான வெற்­றியை பெற்­றுக்­கொண்டார். சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க 1994ம் ஆண்டு தேர்­தலில் அத்­த­ன­க­ல தொகுதியை விட வடக்கின் பல இடங்­களில் கூடிய சத­வீ­தங்­களில் வாக்­கு­களை பெற்­றி­ருந்­தமை இங்கு விசேட தன்மை ஆகும். எனினும் அவ்­வாறு வெற்­றி­யீட்­டிய சந்­தி­ரிக்கா அந்த ஆணையின் படி செயற்­ப­டாமல் போய்­விட்டார். அந்த சந்­தர்ப்­பத்தை தவிர எந்த ஒரு தேர்­த­லிலும் த.தே. கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தி­க­ளுக்கு உதவி செய்­த­தில்லை. கடந்த முறை முன்னாள் இரா­ணுவ தள­ப­திக்கே அவர்கள் ஆத­ரவு வழங்­கினர். எனவே எதிர்­வரும் தேர்­தலில் கடந்த காலங்­களை போலவே தவ­றான தீர்­மா­னங்­களை எடுக்­காமல் கூட்­ட­மைப்பு தீர்க்க தரி­ச­ன­மான தீர்­மானம் ஒன்றை எடுக்­கு­மென நம்­பு­கின்றோம். குறை­பா­டுகள் எங்கும் இருக்­கலாம். ஆனால் குறை­பா­டுகள் குறித்து பேசிக் கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை. குறை­பா­டுகள் அவர்­க­ளி­டத்­திலும் இருக்­கலாம். எம்­மி­டத்­திலும் இருக்­கலாம். அவற்றை விடுத்து எதிர்­கா­லத்தை நோக்கி முன்­செல்­லு­வதே முக்­கி­ய­மா­ன­தாகும். அந்த வகையில் சிறந்த ஆரம்பம் ஒன்­றுக்கு அடித்­த­ள­மி­டு­வ­தற்கு கூட்­ட­மைப்­பிற்கு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. ஜனா­தி­ப­திக்கு ஆத­ரவு வழங்­கு­வதன் மூலம் கூட்­ட­மைப்பு ஒரு நல்ல செய்­தியை விடுக்­கலாம். ஜனா­தி­ப­திக்கு ஆத­ரவு வழங்­கு­வதன் மூலம் கூட்­ட­மைப்பின் கொள்­கையில் மாற்­றங்­களை செய்ய வேண்­டிய அவ­சியம் இல்லை. ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவிற்கு தான் கூட்­ட­மைப்­பினர் இது­வரை எவ்­வி­த­மான உத­வி­க­ளையும் செய்­த­தில்லை. அர­சியல் ரீதி­யா­கவோ இரா­ஜ­தந்­திர ரீதி­யா­கவோ உத­வி­ய­தில்லை. பாரா­ளு­மன்ற தெரிவு குழு­விற்கும் வர­வில்லை. இடம்­பெ­யர்ந்­த­வர்­களை மீள்­கு­டி­யேற்­றவும் உதவி செய்­ய­வில்லை. அபி­வி­ருத்­தி­யிலும் பங்­கெ­டுக்­க­வில்லை. யாழ்­தேவி ரயில் சேவை ஆரம்ப நிகழ்­விற்கும் வர­வில்லை. வர­லாறு இவ்­வாறு தான் உள்­ளது. எனவே இந்த சந்­தர்ப்­பத்­தை­யா­வது பயன்­ப­டுத்தி கூட்­ட­மைப்­பினர் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவிற்கு உதவி செய்ய வேண்டும். இந்த மகத்­தான சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி கூட்­ட­மைப்­பினர் தேசிய அர­சியல் நீரோட்­டத்தில் பங்­கெ­டுத்து முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். இம்முறை கூட்டமைப்பு தவறுகளை விடாமல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் யதார்த்த பூர்வமான மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடியதுமான தீர்வு ஒன்றை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளலாம். அந்த சந்தர்ப்பம் உருவாகுவதற்கு ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

 

SHARE