மிக நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்..!! (வீடியோ)

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ், உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

அடுத்த ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெறவுள்ளது.

இவரது ஒவ்வொரு நகமும் சுமார் 2 அடி நீளம் உள்ளது.

“என் வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை நகங்களை வளர்ப்பதற்கே செலவிட்டிருக்கிறேன். 23 ஆண்டுகளுக்கு முன்பு என் தோழியைப் பார்த்துதான் நகங்களை வளர்க்கும் ஆர்வம் வந்தது. ஒரு கட்டத்தில் நகங்களைப் பராமரிப்பதும் வளர்ப்பதுமே என் முழு நேர வேலையாக மாறிவிட்டது. பின்னர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. 23 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன். இன்று சாதனையை எட்டிவிட்டேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி.
என அயன்னா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.”

நீண்ட நகங்கள் காரணமாக தன்னால் எந்த வேலையையும் தனியாக செய்ய முடியாதுள்ளதாகவும், நகங்களுக்கு பாலிஷ் போடுவதற்கு ஒரு வாரம் எடுக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

About Thinappuyal News