ஜனா­தி­பதி மைத்­திரி யாழ். விஜயம்..!!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 14ஆம் திகதி சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜ யம் செய்­ய­வுள்ளார். யாழ்ப்­பாணம் இந்­துக்­கல்­லூரி விளை­யாட்டுத் திடலில் கல்வி அமைச்­சினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அகில இலங்கை தமிழ் தினப்­போட்­டியில் வெற்­றி­பெற்ற மாண­வர்­க­ளுக்­கான பரி­சுகள் வழங்கும் வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொள்ளும் வகை­யி­லேயே ஜனா­தி­ப­தியின் யாழ்ப்­பாண விஜயம் அமை­ய­வுள்­ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோரின் அழைப்­பின்­பேரில் ஜனா­தி­பதி யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­கிறார். இந்த பரி­ச­ளிப்பு விழாவில் எதிர்க்­கட்சித் தலை­வரும், தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன், வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே , வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் ஆகியோர் உட்­பட பலரும் இந்­நி­கழ்வில் பங்­கேற்­க­வுள்­ளனர்.

காலை 10 மணி முதல் பிற்­பகல் 1 மணி­வரை இந்த நிகழ்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த நிகழ்வை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சி மாவட்டத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About Thinappuyal News