நூற்றுக்கணக்கான ஐ.எஸ் தீவிரவாதிகள் சரணடைந்ததாக குர்து படையினர் தகவல்..!!

சிரியா மற்றும் ஈராக்கின் வடக்கு பகுதிகளில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் இயக்கத்தினர் தற்போது தங்களது செல்வாக்கை இழந்து வருகின்றனர். அரசுப்படையினரின் தாக்குதலால் பெரும் இழப்பை சந்தித்துள்ள ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த தீவிரவாதிகள் குறுகிய இடத்தில் சிக்கிய எலியாக தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான பேர் கடந்த வாரம் குர்து படையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரணடைந்த அனைவரும் தீவிரவாதிகளா? என்று தெரியவில்லை, நூறுக்கும் மேற்பட்டவர்கள் ஐ.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும் குர்து படையினர் தெரிவித்துள்ளனர்.