ஸ்மார்ட் போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடிவந்த பெண் ஒருவர் கண் பார்வையை இழந்திருக்கிறார்.

ஸ்மார்ட் போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடிவந்த பெண் ஒருவர் கண் பார்வையை இழந்திருக்கிறார்.

சீனாவைச் சேர்ந்த வு சியோஜிங் (21) என்ற பெண் ஸ்மார்ட் போனில் தொடர்ந்து ஹானர் ஆஃப் கிங்ஸ் என்ற கேமினை விளையாடி வந்துள்ளார். ஸ்மார்ட் போனில் ஒரே சமயத்தில் பலர் விளையாடக்கூடிய மல்டிபிளேயர் கேமான ஹானர் ஆஃப் கிங்ஸ் விளையாட்டை வு சியோஜிங் தொடர்ந்து பல மணிநேரம் தனது ஸ்மார்ட் போனில் விளையாடி வந்துள்ளார். இதனால் தனது வலது கண்ணை இழந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ரெட்டினல் ஆர்டரி அகல்ஷன் (Retinal Artery Occlusion) எனும் நோய் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இது குறித்து சியோஜிங், “சிறிதும் இடைவெளியின்றி தொடர்ந்து கேம் விளையாடும் பழக்கம் எனக்கு உண்டு. எனது பெற்றோர் பலமுறை எச்சரித்தும் விடாமல் விளையாடிக் கொண்டிருந்தேன். அதன் எதிரொலியாக என் கண் பார்வை பறிபோனது” என்று கூறினார்.

சீனாவில் மிகவும் பிரபலமான கேம்களில் ஹானர் ஆஃப் கிங்ஸ் கேம் ஒன்று. தற்போது இதனை 20 கோடி பேர் விளையாடிவருகின்றனர். இந்த கேமினை உருவாக்கிய டென்சென்ட் நிறுவனம் 12 வயதாகாத குழந்தைகள் இதை தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை விதித்தது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News