மகனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட சாலையோரம் தோசை சுட்டு விற்கும் பிரபல டிவி நடிகை..!! (வீடியோ)

பிரபல மலையாள டிவி சீரியல் நடிகை கவிதா லட்சுமி தனது மகனின் படிப்பு செலவை சமாளிக்க சாலையோரம் தோசை சுட்டு விற்பனை செய்கிறார். மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் கவிதா லட்சுமி. ஏசியாநெட் டிவியில் ஒளிபரப்பான ஸ்த்ரீதனம் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். அவர் தற்போது அயலத்தே சுந்தரி என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரை கே.கே. ராஜீவ் இயக்கி வருகிறார்.

மகனை வெளிநாட்டில் படிக்க வைக்க கவிதா லட்சுமி கல்விக்கடன் கேட்டு பல வங்கிகளுக்கு ஏறி இறங்கியது தான் மிச்சம். எந்த வங்கியும் கல்விக் கடன் கொடுக்கவில்லை. டிவி தொடர் டிவி தொடர்களில் நடித்து கிடைக்கும் பணத்தை மட்டும் வைத்து மகனின் படிப்பு செலவை சமாளிக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக ஏதாவது வேலை செய்ய முடிவு செய்தார் கவிதா. வியப்பு தனக்கு நன்றாக தோசை சுட வரும் என்பதால் அதையே தொழிலாக செய்யத் துவங்கியுள்ளார் கவிதா. சாலையோரம் தோசைக் கடை நடத்தி வருகிறார் கவிதா. சாலையோரக் கடையில் அவர் தோசை சுடுவதை பார்த்த பலரும் வியப்படைந்தனர்.

கவிதா லட்சுமி ஒரு சிறிய கடையில் தோசை சுடும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.