ஐந்­தா­வது வரு­ட­மாக யாழ்.மாவட்ட செய­லகம் மற்றும் யாழ். கால்­பந்­தாட்ட சங்­கத்­துடன் இணைந்து மைலோ நிறு­வனம் நடத்தும் மைலோ வெற்றிக் கிண்­ணத்­திற்­கான கால்­பந்­தாட்டத் தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டில் யாழ். மாவட்­டத்தில் விளை­யாட்டை அபி­வி­ருத்தி செய்யும் நோக்­கு­டனேயே இக்­கால்­பந்­தாட்டத் தொடர் ஆரம்­பிக்­கப்­பட்­டது. மேலும் இவ் ஆண்­டுக்­கான மைலோ கிண்ணத் தொடர் எதிர்­வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இந்தத் தொடரில் இம்­முறை 100 பாட­சாலை அணி­க­ளுடன் 210 கால்­பந்து கழக அணி­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளன.

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களில் மொத்­த­மாக 11 இடங்களில் 300 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.