தளபதி விஜய்யின் 62 எப்படிப்பட்ட படம்- முருகதாஸ் கூறிய ஸ்பெஷல் தகவல்

ஏ.ஆர். முருகதாஸ், விஜய் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி என மெகா ஹிட் படங்கள் வந்துவிட்டது. தற்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைய இருக்கின்றனர்.

இப்படம் எப்படிப்பட்ட கதையாக இருக்கும் என்று ஏ.ஆர். முருகதாஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், இந்த படம் எமோஷ்னல் கலந்த ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக இருக்கும், விஜய்யை ஒரு வித்தியாசமான பரிமாணத்தில் காட்ட விரும்புகிறேன். அதற்கான தீவிர வேலைகளில் தற்போது இறங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியானதும் இப்படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து விஜய் தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.