கோமாவில் இருந்து எழும்பியிருக்கும் மாமா விக்கிக்கு 1987இல் வடக்கு கிழக்கு இணைந்திருந்த விசயத்தை யாராவது சொல்ல முடியாதோ?

 

கோமாவில் இருந்து எழும்பியிருக்கும் மாமா விக்கிக்கு 1987இல் வடக்கு கிழக்கு இணைந்திருந்த விசயத்தை யாராவது சொல்ல முடியாதோ? வடக்கு – கிழக்கை பிரிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுக்கப்பட்ட போதும் இவரென்ன பிரேமானந்தாவோடு சல்லாபித்துக் கொண்டு இருந்தவரோ?

வட மாகாணத்தை மட்டுமே கடந்த 5 ஆண்டுகளாக ஒழுங்காக நடத்த முடியேல்ல. ஒரு முதலமைச்சரும் நாலு அமைச்சரும் சேர்ந்து வடமாகாண மக்களின் முன்னேற்றத்துக்கு மண்ணள்ளிப் போட்டுவிட்டு தாங்கள் சுகபோகமாக வாழ்ந்ததைவிட என்ன விடயத்தை சாதித்தனர்? கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு அபிவிருத்தி என்று என்ன விடயத்தில் இவர்கள் சாதித்தார்கள்?

பல நூற்றுக்கணக்கான தீர்மானங்களை இயற்றியது மட்டும் தான். இயற்றிய ஒரு தீர்மானத்தையாவது நடைமுறைப்படுத்த முடிந்ததா இவருக்கு. இந்ததத் திறத்திலை இவருக்கு கிழக்கும் இணைத்து வேணுமாம். ‘மூஞ்சுறு தான் போகக் காணேல்லை தும்புக் கட்டையையும் இழுத்துதாம்’ என்ற கதைதான்.

இன்றைக்கு ஜெயிலில இருக்கும் முன்னாள் குழந்தைப் போராளி பிள்ளையான் ‘வேட்கை’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை தன மொழியில் எழுதி விட்டு இருக்கின்றார். அதில பிள்ளையான் முதல்வராக இருக்கும் போது செய்த அபிவிருத்தி நடவடிக்கைகள் இருக்கு.

விக்கி ஐயா அப்படி ஒரு புத்தகம் எழுதினால் அவர் இயற்றிய தீரமானங்களை மட்டும் தான் லிஸ்ற் பண்ண முடியும். இந்த லட்சணத்தில கிழக்கையும் இணைத்து ஏன்னையா அந்த மக்களின்ர முன்னேற்றத்திலையும் மண் அள்ளிப் போட நிக்கிறியல்.

புத்துர் கிந்துசிட்டியில சனம் இருக்கிற இடத்தில சவம் எரிக்க வேணும் என்று நிக்கிற சாதியத் திமிருக்கு பணிந்து போகும் நீங்கள் தமிழ் மக்களுக்கு உரிமை எடுத்து கிழப்பியள். அதை நாங்கள் நம்ப வேணும். பென்சன் எடுத்துப் போட்டு பொழுதுபோக்கு அரசியல் செய்யிறது ஆராவது கேள்வி கேட்டா நெஞ்சைப் பொத்திக் கொண்டு ஆஸ்பத்திரியில படுக்கிறது.

விக்கி ஐயா பேசாம கொழும்பு செவினல போய் பேரப்பிள்ளையளோட இருந்து கடைசிகாலத்தை கழிக்கிறது தானே. அது உங்களுக்கு புண்ணியமாய் போகும். ஏன் தமிழ் சனத்தின்ர வாழ்க்கையோட விளையாடுறியல்.

._._._._._.

வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாவிட்டால் திருகோணமலை மாவட்டத்திற்கு என்ன நடந்ததோ அதுவே நாளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கு நடக்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் உட்படசில அரசியல் வாதிகள் வடக்குக் கிழக்கு இணைப்பு இப்போது சாத்தியமில்லை. தற்போது அரசாங்கம் தருவதை பெற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்து வரும் கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.