அவள் படத்தை பார்க்க மாட்டேன் என ஆண்ட்ரியா சொன்னதற்கு இதுதான் முக்கிய காரணம்..!

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் நவம்பர் முதல் வாரத்தில் அவள் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிரட்டியுள்ளது.

பேய் படம் என்றாலே நான் பார்க்க மாட்டேன் என ஆண்ட்ரியா கூறியிருந்தார், அதனால், அவள் படத்தையும் பார்க்க மாட்டேன் என்றார்.

ஆனால், உண்மையான காரணம், அதெல்லாம் இல்லை, படத்தில் நிறைய 18 முத்தக்காட்சிகள் உள்ளது, அதனால் தான் படத்தை காண ஆண்ட்ரியா தயங்குகின்றார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

அவள் படம் தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம்.