ஜிகர்தண்டா ஹிந்தி ரீமேக்கில் அசால்ட் சேதுவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி என பலர் நடித்திருந்த படம் ஜிகர்தண்டா. இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் படங்களின் வரிசையிலும் இடம்பெற்றது.

அதிலும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கூட பாபி சிம்ஹாவுக்கு கிடைத்தது.

தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. சித்தார்த் வேடத்தில் ஃபர்ஹான் அக்தர் நடிக்க பாபி சிம்ஹாவின் அசால்ட் சேது வேடத்தில் சஞ்சய் தத் நடிக்க இருக்கிறாராம்.

நிஷிகந்த் கமத் இயக்கயிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 4ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளது.