மத்தலவுக்கு அனுப்பப்பட்ட விமானங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய விமானங்கள் இரண்டு மத்தல விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை மற்றும் சிசேல் ஆகிய இடங்களில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த விமானங்களே இவ்வாறு மத்தலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.