ஈரோடு வந்த ஹன்சிகா! ரசிகர்களின் செயலால் திணறிய போலீஸ் (படம் உள்ளே)

நடிகை ஹன்சிகாவுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். தமிழ் தெலுங்கு தொடர்ந்து அவர் தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று ஈரோட்டில் ஒரு மொபைல் கடையை திறப்பதற்காக வந்திருந்தார். ஹன்சிகாவை பார்க்க அவரது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிட்டதால் அந்த ஏரியாவே பரபரப்பாக இருந்தது.

மேலும் ஹன்சிகாவை அருகில் பார்க்க வேண்டும் என பலரும் அருகில் வர முண்டி அடித்து வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு போதும் என்றாகிவிட்டது.

இந்த நிகழ்வால் அங்கு நீண்ட நேரம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.