ஹட்டன் நோர்வூட் நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் நன்னீர் மின்பிடி வளர்ப்பை ஊக்குவிக்க மத்திய மாகாண விவசாய மற்றும் மீன்பிடிதுறை அமைச்சின் ஊடாக 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக குறித்த பகுதியில் மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான குளம் அமைக்கும் பணியின் ஆரம்பகட்ட வேலை நேற்று நிவ்வெளிகம தொழிற்சாலை பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மத்திய மாகாண விவசாய மற்றும் மீன்பிடிதுறை அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமை தாங்கி இந்த ஆரம்பகட்ட பணியை நடத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் தலைவர் வெள்ளையன் தினேஷ், நன்னீர் மீன்பிடித்துறையின் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.