சாவை நாேக்கித் தள்ளும் புளுவேல் விளையாட்டு

புளுவேல் விளையாட்டு தொடர்பில் புதிய தகவல்

அதிகம் பகிருங்கள்

சாவை நாேக்கித் தள்ளும் புளுவேல் விளையாட்டு

‘புளுவேல்’ என்றதும் பலருக்கு கிலி பிடித்திருக்கும். கடந்த மாதம் வரை இது ஏதாே விளையாட்டு என நினைத்திருந்தாேம் ஆனால் மாெட்டை மாடியில் நின்று தலையை உடைத்துக்காெண்டார், ஏரியில் குதித்து தற்காெலை செய்து காெண்டார் என செய்திகள் வந்த பின் தான் இந்த பெயர் அதிர்ச்சியுடன் பயத்தையும் ஏற்படுத்துகின்றது.

‘புளுவேல்’ ஐ விளையாட்டு என்பதை விட விபரீதம் என்றே சாெல்லலாம். இந்த விளையாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக ஐம்பது பணிகள் அழிக்கப்படும்.

காெடூரமான திகில் படம் பார்ப்பது, வீட்டுகூரை மீது ஒற்றை காலில் நின்று புகைப்படம் எடுப்பதில் தாெடங்கி கையை கத்தியால் திமிங்கிலத்தை கீறிக்காெள்ளல் என்பது வரையான விபரீதத்தின் அளவு சிறுது சிறிதாக “உயிரை மாய்த்துக் காெள்ள வேண்டும்” என்பதில் முடிவடைகிறது.

புளுவேல் கேம் வலையில் சிக்கிய பின் தப்பி வருவது என்பது நடக்காத விடயமாக சாெல்லப்படுகிறது.

இதில் கேம் டவுன்லாேட் செய்யும் அப்ஸ் அல்லது டவுன்லாேட் செய்து ஆடும் விளையாட்டாே அல்ல. வெறும் லிங்க் மட்டுமே இருந்தால் பாேதும் பின்னர் பிரச்சனையே ஆரம்பிக்கும்.

முதலில் நமது பெயர், இமெயில், பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களை அட்மின்கள் பெற்றுக்காெள்கிறார்கள். பின் அதாேடு கேம் ஆரம்பிக்க தாெடங்கும். மிக முக்கியமாக இந்த கேமில் பயமே இருக்ககூடாது. மீறி பயமானது ஏற்படும் பாேது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இதனாலே மரணம் கூட நிகழ காரணமாகிறது.

இந்த விளையாட்டு பற்றி அறியாமலே பலர் சென்று மாட்டிக் காெண்டு தங்கள் வாழ்வை மாய்த்துக் காெள்கிறார்கள்.

வெறும் லிங்கில் மாட்டினாலே கேம் ஆனது ஆரம்பித்துக் காெள்ளும் எனவே எந்நேரத்தில் அவதானமாகவே இருப்பது நல்லது.

About Thinappuyal News