எமக்கு நீங்கள் வாக்களித்ததால் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம்  நம்பிக்கை துரோகிகள் 

 

எமக்கு நீங்கள் வாக்களித்ததால்
நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம் 
நம்பிக்கை துரோகிகள்
நீங்கள் அரசியல்வாதிகள் என்பதை
நிரூபித்து விட்டீர்கள்.


இருந்த இருபத்து ஒன்றையும்
இல்லாது செய்த சுயநலவாதிகள்
நீங்கள் எல்லாம் அடுத்த முறை
பாராளுமன்ற கதிரையில் அமராமளிருக்க
முட்டாள் மக்கள் அபாய புள்ளடியிடவேண்டும்
நம்பிக்கை துரோகிகள்.

சத்தியத்தலைவன் என்றோம்
தேசியத்தலைவன் என்றோம்
ஏழைகளின் தோழன் என்றோம்
எல்லா கோஷங்களுக்கும் பதிலாய்
எம்மை ஏமாற்றிய
நம்பிக்கை துரோகிகள்.

சேர்ப்பதெல்லாம் சேர்த்துவிட்டீர்கள்
இதுவும் போதாதென்றா எங்களை
ஈடுவைத்தீர்கள்
நம்பிக்கை துரோகிகள்.

வடக்கில் தோற்ற திருத்த சட்டத்தை
கிழக்கில் தேற்றிய நம்பிக்கை துரோகிகள்.

பேசுவோம் பேசுவோம் என்று
எம்மை பேயன்களாக்கிய
முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்ற
நம்பிக்கை துரோகிகள்.

நம்பிக்கை துரோகிகளே
பழக கற்றுக்கொள்கிறோம்
உங்களது மீள் எழா துரோகங்களையும்
ஆளப்போகும் சி எழுத்தானிடம்
கை கட்டி மண்டியிடவும் கற்றுக்கொள்கிறோம்.

முகவரியிழந்த மியன்மார் போல
இருந்தும் இழந்த முட்டாள்களாய்
அடுத்தவன் கட்டளைக்கு
அடிபணிந்து வாழ கற்றுக்கொள்கிறோம்.

இப்பொழுதே இன வெறியியர்களின்
வாசனை வீசுகிறது
கட்சிதாமாய்
கதவை அடைத்துக்கொள்ளுங்கள்
கருகும் எம்முடல்களை
அடுத்த நாட்டுக்கு
வீடியோ எடுத்தனுப்பி
காசு சேர்த்து வயிறு வளர்க்க
கதவைவுயும் கண்ணையும் காதையும்
பொத்திக்கொள்ளுங்கள்
நம்பிக்கை துரோகிகள்.