நடிகர் சந்தானம் தலைமறைவு

பாஜக வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானத்தை கைது செய்ய வளசரவாக்கம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தீவிரத்திற்கு பின்னால் மாநில பாஜக நிர்வாகிகளின் அழுத்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபகாலமாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டுவந்த நடிகர் சந்தானம் சண்முகசுந்திரம் என்பவருடன் இணைந்து வணிகம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பணப் பிரச்சனை கைகலப்புவரை சென்றுள்ளது.

இதனியையே சந்தானத்திடம் பேச சென்ற பாஜக தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் விஜயா என்பவரை நடிகர் சந்தானம் தாக்கியதாக சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே விவகாரம் பெரிதானதை தொடர்ந்து நடிகர் சந்தானம் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரை கைது செய்ய மாநில பாஜக சார்பில் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் விரைவில் சந்தானத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Thinappuyal News