யாழ்ப்பாணத்தில் 19 கிணறுகளில் புதுவகை நுளம்பு..!!

தலை மன்னார் பகுதியில் இனங்காணப்பட்ட, மலேரியா நுளம்புகள், யாழ்ப்பாணம் பஸ் நிலையச் சூழலில் உள்ள 19 கிணறுகளில் இனங் காணப்பட்டுள்ளனவென, அறியமுடிகின்றது.

இந்த நுளம்பு, இந்தியாவில் அதிகமாகக் காணப்படும், ‘ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே’ என்ற பெயரைக் கொண்ட, மலேரியா நுளம்பாகும் என்றும் அறியகிடைத்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட, அந்த நுளம்பு, பரவுவதை கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதார அதிகாரி க. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட நுளம்புகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை, ‘ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே’ என்ற ​வகையைச் சேர்ந்த நுளம்புகளும் அதன் குடம்பிகளுமே அவை என்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, அவ்வாறான நுளம்புகள் மற்றும் குடம்பிகளை அழிக்கும் சிறப்பு வேலைத்திட்டத்துக்கு அமைய, நகரின் மத்தியிலிருந்து இரண்டு கிலோமீற்றர் சுற்றுவட்டத்தில் உள்ள அத்தனை கிணறுகளும் உடனடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

“இந்த வகை நுளம்புகள் காணப்படும் கிணறுகளில், பாவனையில் உள்ள கிணறுகளாயின் மீன் குஞ்சுகளும் பாவனை அற்ற கிணறுகளாயின் மருந்துகளும் தெளிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் அதிகமாகக் காணப்படும், ‘ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே’ என்ற பெயரைக் கொண்ட, மலேரியா நுளம்பு மன்னார் மற்றும் வவுனியாவி​லேயே முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளன.

அவை தொடர்பில் தாம் ஆகக்கூடுதலான கவனத்தைச் செலுத்திவருவதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

About Thinappuyal News