புத்தளம் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உள்ளிட்ட இருவர் பலி..!!

புத்தளம் – தப்போவ சரணாயலத்திற்கு சொந்தமான சியம்பலேவ வெவ – இஸ்மத்த வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்கள் கருவலகஸ்வெவ – சியம்பலேவ பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரும், 31 வயதான நபரொருவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிக்குள் மரங்களை வெட்டுவதற்காக 4 பேர் சென்றுள்ள நிலையில், அவர்கள் மீது இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த குறித்த இருவரும், புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள், விலங்கு வேட்டைக்காக வனப்பகுதிக்கு வந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.