200 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!!

கண்டி, ஹாரகம ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக, இன்றுக் காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள், தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னரே, இவ்வாறு திடீரென நோய்வாயப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Thinappuyal News