சர்ச்சைக்குரிய ‘பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ்’ நிறுவனம் தொடர்பில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிணைமுறி விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

அதில் இன்று சாட்சியமளித்த மேற்படி நிறுவனத்தின் தலைமை விநியோகஸ்தரான நுவன் சல்காது என்பவர், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெறுவதற்காக பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லஞ்சம் கொடுத்தமைக்கான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

அதில், ஊழியர் நல நிதியம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே மேற்படி இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.