பொதுமக்களுக்கு சொந்தமான 387 ஏக்கர் காணி உள்ளடங்கலான 617 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவேண்டும் எனவும் மக்களால் இன்றைய தினம் மனுவொன்றும் பப்லோ டி கிரீஷிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரின்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களும், போர் குற்றங்களும் இடம்பெற்ற 30 வருட யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்ட இடமான முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியை ஐக்கிய நாடுகள் சபையின் நிலைமாறுகால நீதிக்கான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஷ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியை பார்வையிட்டார் பப்லோ டி கிரீஷ்

முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்களையும், அவ்விடத்தில் இடைநிறுத்தபட்டுள்ள கட்டுமானப்பணிகளையும் ஐ.நா பிரதிநிதி பார்வையிட்டதுடன் போரினால் பேரழிவை சந்தித்த மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியை பார்வையிட்டார் பப்லோ டி கிரீஷ்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கொழும்பு சென்றுள்ள ஐ.நா வின் விசேட பிரதிநிதி பெப்லோ டி கிறிஸ் இன்றைய தினம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் செய்தார்.

முள்ளிவாய்க்கால் பகுதியை பார்வையிட்டார் பப்லோ டி கிரீஷ்

இதன்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுக் கற்களையும் அவர் பார்வையிட்டார்.

முள்ளிவாய்க்கால் பகுதியை பார்வையிட்டார் பப்லோ டி கிரீஷ்

கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இந்த நினைவுக்கற்களை நிர்மாணித்து அங்கு நடைபெறவிருந்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பொலிசார் இடைக்கால தடையுத்தரவொன்றையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படாலாம் என்று தெரிவித்தே முல்லைத்தீவு பொலிசார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இந்தத் தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்கள் நாட்டப்பட்டமை தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளரும் தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணை ஊடகப் பேச்சாளருமான அருட்தந்தை எழில்ராஜனும் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதற்கமைய அங்கு சென்ற ஐ.நா பிரதிநிதி பெப்லோ, அருட்தந்தை எழில்ராஜனையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் முள்ளிவாய்க்கால் உட்பட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சனைகள் குறித்தும் அங்கு நிலைகொண்டுள்ள படையினர் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான 387 ஏக்கர் காணி உள்ளடங்கலான 617 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவேண்டும் எனவும் மக்களால் இன்றைய தினம் மனுவொன்றும் பப்லோ டி கிரீஷிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் மற்றும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்ரீலங்கா கடற்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள 672 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை கடந்த ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த காணியை மீட்டு தம்மிடம் ஒப்படைக்க ஆவண செய்ய வேண்டும் என்று மக்கள் மனு ஊடாக ஐ.நா பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதிகளான முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

About Thinappuyal News