டயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்டப் தொடரில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற போட்­டியில் கடற்­ப­டையை வீழ்த்திய ரினோன் அணி, டயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்டத் தொடரின் புள்­ளிகள் பட்­டியலில் முத­லி­டத்தைப் பிடித்­துள்­ளது.

இவ்­வாண்­டுக்­கான டயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்டத் தொடரின் போட்­டிகள் மழை கார­ண­மாக பெரும் சிர­மத்­திற்கு மத்­தியில் நடை­பெற்று வரு­கின்­றன. அதன்­படி நேற்­று­முன்­தினம் பெத்­த­கான கால்­பந்­தாட்ட மைதா­னத்தில் நடை­பெற்ற ரினோன் மற்றும் கடற்­படை அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் 3–1 என ரினோன் அணி வெற்­றி­பெற்­றது.

ரினோன் அணி சார்­பாக டெராரோ, ஜொப் மிச்சல் மற்றும் ரிவ்னாஸ் ஆகியோர் கோல்­களைப் போட்டனர். கடற்படை அணி சார்பாக ஷஹீல் ஒரு கோலைப் போட்டார்.