அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி வீரர்கள் பயணித்த பஸ் மீது இந்­திய ரசிகர்கள் கல் வீசி தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

இந்­தி­யா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரும் அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி 3 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் தற்போது விளையாடி வருகின்றது.

ராஞ்­சியில் நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் இந்­தியா 9 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது.

இந்த நிலையில் இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி குஹாத்­தியில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்­றது.

இந்த போட்­டியில் முதலில் ஆடிய இந்­திய அணி 118 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

இதை­ய­டுத்து எளிய இலக்­குடன் கள­மி­றங்­கிய அவுஸ்­தி­ரே­லிய அணி  15.3 ஓவர்­களில் 2 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 122 ஓட்­டங்­களை சேர்த்து 8 விக்­கெட்டுக்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது.

இந்த வெற்­றியின் மூலம் தொடர் 1–-1 என்ற கணக்கில் சம­நி­லையை அடைந்­தது.

கிண்ணம் யாருக்கு என்­பதை நிர்­ண­யிக்கும் கடைசி போட்டி நாளை நடை­பெ­று­கி­றது.

இதற்­கி­டையில், நேற்று போட்டி முடிந்த பிறகு அவுஸ்­தி­ரே­லிய அணி வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­திய அணி தோல்வி அடைந்­ததால் விரக்­தியில் ரசி­கர்கள் தாக்­குதல் நடத்­தி­யி­ருக்­கலாம் என்று கூறப்­ப­டு­கி­றது.

இந்தத் தாக்­கு­தலில் அவுஸ்­தி­ரே­லிய அணி­யினர் சென்ற பேருந்தின் ஜன்னல் கண்­ணா­டிகள் சேதமடைந்­தன.

ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த புகைப்படத்தை ஆஸி. வீரர் ஆரோன் பின்ஞ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.