வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்..!!

வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா பிரதேச செயலகத்தில் வன்னிபாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, பிரதேசசபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், நகரசபை செயலாளர் தயாபரன் மற்றும் வவுனியா நகர பொலிஸ் பொறுப்பதிகாரிகள், மற்றும் திணைக்கள அதிகாரிகள், கிராமசேவகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் வரட்சி நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும், வீட்டுத்திட்டம், மரம் வெட்டப்படுதல் தொடர்பாகவும், கல் மணல் அகழ்வது தொடர்பாக, தினைக்களங்கள் தொடர்பானதும் வேறு வவுனியா பிரதேசங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

 

 

 

About Thinappuyal News