பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் டெலோ புளொட் ஈ பி ஆ எல் எப் மீன்டும் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போரா டுவார்கள்-அரசிற்கு இது கடைசி எச்சரிப்பு

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் டெலோ புளொட் ஈ பி ஆ எல் எப் மீன்டும் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போரா டுவார்கள்-அரசிற்கு இது கடைசி எச்சரிப்பு

தலையங்கத்தை பார்த்தவுடனே செய்தியை வாசிக்கத் தோன்றும் ஆனால் இப்படி ஒரு சாவாலை இந்த ஆயுதக்கட்சிகள் விடமாட்டார்கள் அப்படி விடுவார்களே ஆனால் இவர்களுக்குள்ளேயே முதலில் அடித்து சாவார்கள் தமிழ் இனம் ஒன்று பட்டு ஆயுதம் ஏந்திப்போராட வேண்டும் என்று உசுப்பேத்துபவர்கள் இவர்கள் அவ்வளவு தான் ஆயுதமேந்திப் போராடுவோம், அரசுக்கெதிராகக் குரல்கொடுப்போம், தமிழினத்திற்கு தொடர்ந்தும் அநீதிகள் இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என பாராளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் குரல்கொடுப்போர் ஒன்றைச் சிந்திக்கவேண்டும். முதலாவது அரசின் சலுகைகளைப் பெறுவதை இடைநிறுத்துங்கள்.

ஒரே குறிக்ளோடு கடந்த 30 வருடங்களாக தமிழினம் அரசுக்கெதிராக ஆயுதமேந்திப்போராடியதே அந்தக் கொள்கைக்கு ஒத்துவாருங்கள். அரசிடமே வாங்கிச் சாப்பிட்டு அவர்களுடன் இருந்துகொண்டு வாய்வீரம் பேசவேண்டாம். அரசாங்கத்திற்குப் பக்க பலமாக இருப்பதே நீங்கள் தான்.

பாராளுமன்றிலும் மாகாணசபையிலும் நீங்கள் தமிழ்த்தேசியத்திற்கு முரணாக நீங்கள் செய்துகொண்ட சத்தியப்பிரமாணத்தை சிந்தத்துப்பாருங்கள். உங்களது சுயநல அரசியலுக்காக தமிழ் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தவேண்டாம். தற்பொழுது தமிழ் அரசியல் இராஜதந்திரிகளுக்குக் கொடுக்கப்படுகின்ற அதிகாரங்களையும் துறந்துவிட்டு மௌனமாக ஒருவாரங்கள் இருந்தாலே போதும். அரசு ஆடிப்போய்விடும்.

இந்தியா ஒருபோதும் தமிழ் மக்களுக்கானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்வேபாவதில்லை. போராட்டத்தை ஆரம்பித்து அழித்தவர்களும் அவர்களே. இந்தியத் தூதரகம் யாழில் இருப்பதே ஆபத்தானது. இந்த நடைமுறையைப் பின்பற்றுங்கள். இந்த அரசாங்கம் எப்படி ஆடிப்போகும் என்பதை மட்டும் வேடிக்கை பார்க்கலாம். வாய்வீரம் பேசாது அடக்கி வாசிப்பது அரசியல்வாதிகளாகிய உங்களுக்கு நல்லது.

பூரண கதவடைப்பில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்ப்போம்! அமைச்சர் அனந்தி சசிதரன்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணம் தழுவியதாக வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருக்கும் பூரண கதவடைப்புப் போராட்டத்தில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்க்க முன்வருமாறு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தாயக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..,
தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்ட பின்பு தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவுகாண வேண்டுமென வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் சாகும்வரை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிக்காது உடனடியாக நிறைவேற்றுமாறும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ் பொது அமைப்புகளால் அறிவிக்கப்பட்டுள்ள வட மாகாணம் தழுவிய பூரண கதவடைப்பு போராட்டமானது தமிழர்கள் போராடித்தான் உரிமைகளைப் பெறவேண்டும் என்ற யதார்த்த நிலையை உணர்த்தி நிற்கின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் துணையோடு கைது செய்யப்பட்டு அதிகார அத்துமீறலின் கீழான அச்சுறுத்தல் நிலையில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே அடிப்படை ஆதார-மாகக்கொண்டு நீதிக்குப் புறம்பாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்திவரும் இலங்கை அரசின் தந்திரத்தனமான போக்கை எமது ஒன்றுபட்ட பலத்தின் மூலம் முறியடிக்க தாயக மக்கள் அனைவரும் இக்கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்பது காலத்தின் கட்டாயமாகும்.
அநீதியான முறையில் சிறைவாசம் அனுபவித்து வரும் 132 தமிழ் உறவுகளுக்காக நாங்கள் உறுதுணையாக இருக்கின்றோம் எனவும் அவர்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம் என்பதையும் இலங்கை அரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடித்துரைக்கும் விதமாகவும் நாம் இக்கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்போம் வாரீர்! எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை 13 திகதி வடக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு உலக தமிழ் மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்குகின்றனர்.

அனுராதபுரத்தில் கடந்த காலத்தில் உண்ணாவிரதம் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஜோன்சன் தெரிவித்தார்.

வடக்கில் நாளை 2017.10.13 நடைபெறவிருக்கும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியினர்.

இன்று 12 திருமலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதெ அக்கட்சியின் தலைவர் கே.இன்புராசா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,………

யுத்தம் முடிவடைந்த பின்னர் பற்பல குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதுவித வழக்குத்தாக்கல்கள் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அந்தவகையில் நீதிமன்றத்தில் அவர்களுக்கான வழக்குகள் நிறைவேற்றப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

அதுமட்டும் அல்லாது அனுராதபுரத்தில் உள்ள அரசியல் கைதிகளின் முன்வைத்துள்ள கோரிக்கையின் பிரகாரம் வழக்குகள் ஒருபோதும் கொழும்பு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது சாத்தியப்பாடாக அமையாத ஒன்று அத்துடன் அவர்களை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்பவைகளை முன்வைத்து நாளைய தினம் நடைபெறும் ஹர்த்தாலுக்கு எமது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவிக்கின்றதாக அவர் குறிப்பிட்டார்.