ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட ‘வீடியோ கேசட்’ எங்கே?? பத்மநாபா படுகொலையில் கருணாநிதி உடந்தை??

ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட ‘வீடியோ கேசட்’ எங்கே?? பத்மநாபா படுகொலையில் கருணாநிதி உடந்தை??

ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். முதலாவது, வர்மா கமிஷன்.

அதன்பின் ஜெயின் கமிஷன். வர்மா கமிஷன் நியமிக்கப்பட்டபோது முதலில் பாதுகாப்புக் குளறுபடிகள் பற்றியும் சதித்திட்டம் பற்றியும் விசாரிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் நீதிபதி வர்மா, தன்னால் சதித்திட்டம் குறித்த விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். காரணம், புலன் விசாரணை அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அது முடியாமல் சதித்திட்டம் குறித்த விசாரணையை முழுமையாக மேற்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்.

எனவே பாதுகாப்புக் குளறுபடிகள் பற்றி மட்டும் வர்மா கமிஷன் விசாரிக்கும்படி அரசாங்கத்தின் உத்தரவு திருத்தி அனுப்பப்பட்டது. அதன்படியே வர்மா கமிஷன் பாதுகாப்புக் குளறுபடிகள் குறித்து மட்டும் விசாரிக்கத் தொடங்கியது.

இந்த கமிஷனில் இந்திய உளவுத்துறைத் தலைவர் முதற்கொண்டு பலபேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். பல அதிமுக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். முதலாவது, வர்மா கமிஷன். அதன்பின் ஜெயின் கமிஷன்.

வர்மா கமிஷன் நியமிக்கப்பட்டபோது முதலில் பாதுகாப்புக் குளறுபடிகள் பற்றியும் சதித்திட்டம் பற்றியும் விசாரிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் நீதிபதி வர்மா, தன்னால் சதித்திட்டம்  குறித்த  விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். காரணம், புலன் விசாரணை அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அது முடியாமல் சதித்திட்டம் குறித்த விசாரணையை முழுமையாக மேற்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்.

எனவே பாதுகாப்புக் குளறுபடிகள் பற்றி மட்டும் வர்மா கமிஷன் விசாரிக்கும்படி அரசாங்கத்தின் உத்தரவு திருத்தி அனுப்பப்பட்டது. அதன்படியே வர்மா கமிஷன் பாதுகாப்புக் குளறுபடிகள் குறித்து மட்டும் விசாரிக்கத் தொடங்கியது.

இந்த கமிஷனில் இந்திய உளவுத்துறைத் தலைவர் முதற்கொண்டு பலபேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். பல அதிமுக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன

அவற்றில் ஒன்று, ஐ.பியின் தலைவராக இருந்த எம்.கே. நாராயணன் மே 22 அன்று பாரதப் பிரதமருக்கு நேரடியாக அனுப்பிய ஒரு கடிதம்.

அக்கடிதத்தில் எம்.கே. நாராயணன், ‘எங்களுக்கு ஒரு வீடியோ கேசட் கிடைத்திருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் சம்பவம்  நிகழ்ந்த அன்று எடுக்கப்பட்ட   அந்த வீடியோ கேசட்டைநாங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். விரைவில் அது பற்றிய தகவல்களை அளிக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் வர்மா கமிஷன் விசாரணைகள் முடிகிறவரை, சி.பி.ஐயின் புலன் விசாரணைகள் முழுவதுமே முடிகிற வரை அப்படி எந்த ஒரு வீடியோ கேசட்டையும் ஐ.பி. வெளியிடவேயில்லை.

ராஜிவ் கொலைவழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரி என்னும் முறையில் இது பற்றி என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

அப்படி ஒரு வீடியோ கேசட் ஐ.பியின் வசம் அப்போது கிடைத்திருக்குமானால், அது விசாரணைக்கு மிக முக்கிய ஆதாரமாக உதவி செய்யக்கூடியதாக இருக்குமானால் எங்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இறுதிவரை அந்த கேசட் வரவேயில்லை.

சற்று யோசித்துப் பாருங்கள்.

கொலை வழக்கு விசாரணையைத் தொடங்கும்போது ஹரி பாபு எடுத்த புகைப்படங்கள் தவிர எங்களுக்கு வேறு எந்த ஆதாரமும் கிடையாது.

இருட்டில்தான் நடக்கத் தொடங்கியிருந்தோம். ஐ.பி. தலைவர் குறிப்பிட்ட கேசட்டை எங்களுக்குத் தந்திருந்தால் ஒரு சிறு வெளிச்சம் புலப்பட்டிருக்கலாம் அல்லவா?

index ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட 'வீடியோ கேசட்' எங்கே?? பத்மநாபா படுகொலையில் கருணாநிதி உடந்தை?? index4

அன்றிரவு ஏழரை மணியிலிருந்து பத்து மணி வரை சிவராசன் குழுவினர் அந்தப் பொதுக்கூட்ட மைதான வளாகத்தில்தான் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

யார் யார் இருக்கிறார்கள், அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பது அந்த கேசட்டில் பதிவாகியிருந்தால் அது வழக்கைத் தொடங்க எத்தனை உதவியாக இருந்திருக்கும்!

எங்கள் விசாரணையில் தணு, லதா கண்ணனுடன் சென்று லதா பிரியகுமாருடன் பேசினார், அவர் மூலமாகத்தான் மாலையிட அனுமதியே கிடைத்தது என்று தெரிந்திருந்தது.

பின்னால் நாங்கள் விசாரித்துத் தெரிந்துகொண்ட இந்த விஷயத்தை அந்த கேசட் ஒருவேளை உள்ளங்கைக் கனி ஆதாரமாகக் காட்டியிருக்கலாமல்லவா?

சிவராசனும் மற்றவர்களும் சம்பவ இடத்தில் யார் யாருடன் பேசினார்கள், எப்படி அனுமதி கிடைத்தது அவர்களுக்கு என்பதையெல்லாம் அந்த கேசட்  அவசியம் சுட்டிக்காட்டியிருக்கும்.

ஆனால் அது சி.பி.ஐயிடம் கிடைத்தால் மரகதம் சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பிரச்னை வரும் என்று கருதி முழுப்பூசனியை மறைத்துவிட்டது ஐ.பி.

இறந்த தலைவரைவிட இருக்கும் பிரமுகர்கள் முக்கியமாகிவிடுகிறார்கள்.

வர்மா கமிஷன் விசாரணைகள் முடிந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் படுமோசம், அதைவிட உளவுத்துறையின் செயல்பாடுகள் மோசம் என்பது அறிக்கையாக எழுதப்பட்டு இந்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிறகு, முறைப்படி உளவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

1995ம் ஆண்டு இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பையும் அரசு சி.பி.ஐயின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் வசமே ஒப்படைத்தது. முன்னதாக, பாதுகாப்புக் குளறுபடிகளுக்காக மாநில போலீசார் மீது விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட தமிழக போலீஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

உளவுத்துறை அதிகாரிகள் மீதான விசாரணையை மட்டும் சி.பி.ஐ மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, வழக்கு எஸ்.பி. அளவிலான ஓர் அதிகாரியின் பொறுப்பில் விடப்பட்டது. (பொதுவாக டி.எஸ்.பி. அளவிலான விசாரணைகள்தான் நடக்கும்.)

ஆனால், அந்த விசாரணை என்ன ஆனது, யார் யார் விசாரிக்கப்பட்டார்கள், விசாரணையில் என்ன தெரிந்தது, என்ன முடிவெடுத்தார்கள், விசாரணை முடிவு அரசுக்கு அனுப்பப்பட்டதா எதுவும் தெரியாது!

சொல்லப்போனால் அந்த கேஸ் டயரிகளே இன்று இருக்குமா என்பது சந்தேகம்.

அந்த விசாரணை ஒழுங்காக நடந்திருக்குமானால் உளவுத்துறை அதிகாரிகள் எங்கெங்கே கோட்டை விட்டார்கள், எதனால் ஸ்ரீபெரும்புதூர்  சம்பவம் குறித்த ஒரு சிறு தகவல்கூட உளவுத்துறைக்கு முன்கூட்டித் தெரியாமல் போனது என்று ஆரம்பித்து அனைத்து வினாக்களுக்கும் விடை வந்திருக்கும்.

ஆனால் எம்.கே. நாராயணன் தொடங்கி, அத்தனை ஐபி அதிகாரிகளையும் ‘காப்பதற்காக’வே அவதரித்த மாதிரி சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமை இந்த வழக்கில் நடந்துகொண்டு, மூடி மறைத்துவிட்டது.

இதன்மூலம் சில தனி நபர்கள் காக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் தேசத்துக்கு எத்தனை இழுக்கு? இந்த  ஒரு விவகாரம் என்றில்லை. ராஜிவ் கொலை வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த காலம் முழுதும் இம்மாதிரியான பல சம்பவங்களை நான் எதிர்கொண்டேன்.

sg ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட 'வீடியோ கேசட்' எங்கே?? பத்மநாபா படுகொலையில் கருணாநிதி உடந்தை?? SGபத்மநாபா

முன்பே குறிப்பிட்ட  பத்மநாபா கொலை வழக்கை மீண்டும் நினைவுகூர்வோம்.

சின்ன சாந்தன்  பிடிபட்ட பிறகுதான் அந்த வழக்கின் முழு வடிவம் வெளிச்சத்துக்கு வந்தது.  கொலை நடந்த சமயம் தமிழ்நாடு போலீஸ் ‘விசாரித்து முடித்து’ அதைக் கிட்டத்தட்ட ஓரம் கட்டிவிட்டிருந்தார்கள்.

சின்ன சாந்தன் அளித்த தகவல்களின் அடிப்படையில் சி.பி.ஐ. மேற்கொண்டு அதைத் துப்புத் துலக்கியிருக்குமானால் இன்னும் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.

ஆனால் அந்த வழக்கைத் தமிழ்நாடு போலீஸே பார்த்துக்கொள்ளட்டும் என்று கார்த்திகேயன் சொல்லிவிட்டார்.

ஒரே காரணம், வழக்கை சி.பி.ஐ. எடுத்தால் அன்றைய உள்துறைச் செயலர் நாகராஜன் தொடங்கி, தி.மு.க. தலைவர் கருணாநிதி வரை விசாரிக்க வேண்டியிருந்திருக்கும்.

பொதுமக்கள் எதிர்பார்த்திராத பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியே வந்திருக்கும். நமக்கெதற்கு வம்பு? விட்டுவிடலாம். தமிழ்நாடு போலீசே பார்த்துக்கொள்ளட்டும்!

xrajiv3_1764374h-jpg-pagespeed-ic_-1vav2dha15 ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட 'வீடியோ கேசட்' எங்கே?? பத்மநாபா படுகொலையில் கருணாநிதி உடந்தை?? xrajiv3 1764374hகார்த்திகேயன்

சிறப்புப் புலனாய்வுப் பிரிவின்  தலைவராக  இருந்த கார்த்திகேயன் அன்றைக்குப் பிரதமர் நரசிம்மராவ் தொடங்கி பல அமைச்சர்கள், மிக உயர் அதிகாரிகள் வரை எளிதில் அணுகக்கூடியவராகவும் பழகக்கூடியவராகவும் இருந்தார். அவர் மனம் வைத்தால் எந்த வழக்கையும் எடுக்கலாம், முடிக்கலாம்.

அவரது பணியில் குறுக்கிட ஒருத்தர் என்றால் ஒருத்தரும் கிடையாது. இதனை என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும்.

சி.பி.ஐயின் இயக்குநரே கார்த்திகேயன் விஷயங்களில் தலையிட மாட்டார். அப்படி இருந்தும் அவர் பல வழக்குகளில் பட்டும் படாமலும் நடந்துகொண்டது, சி.பி.ஐ. எடுத்திருக்க வேண்டிய வழக்குகளை வேண்டுமென்றே தவிர்த்தது, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின்  கசப்புக்கு ஆளாகாதிருப்பதே  முக்கியம் என்று நினைத்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

நான் உள்பட அன்று சிறப்புப் புலனாய்வுக் குழுவில் பணியாற்றிய அத்தனை பேரும் அவருக்குக் கீழே இருந்தவர்கள்.

எங்கள் அபிப்பிராயங்களைச் சொல்ல முடியுமே தவிர, அவரை நிர்ப்பந்தம் செய்ய முடியாது. எந்த விஷயத்திலும் அவர் சொல்வதுதான் இறுதி என்றிருந்தது.

மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : 

சிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு!!:

ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்!

சிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு!!: ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –24)

காரணமற்ற தாமதங்கள்

ராஜிவ் கொலை புலன் விசாரணையின்போது நடைபெற்ற சயனைட் மரணங்கள் அனைத்தும் வேகம் மற்றும் விவேகமின்மையால் ஏற்பட்டவை.

எங்களிடம் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் இருந்தார்கள். எந்த வித அபாயகரமான கட்டத்திலும் துணிந்து பாய்ந்து சென்று போரிட வல்லவர்கள்.

புலிகளிடம் சயனைட் இருக்கிறது என்பது நன்கு தெரிந்த பிறகு, வீட்டை முற்றுகையிட்டு, தக்க தருணத்துக்காகக் காத்திருப்பது என்பது எப்பேர்ப்பட்ட அபத்தம்!

இது ஏற்கெனவே பல சமயம் நிரூபணமாகியும் இருக்கிறது.

கோயமுத்தூரில் டிக்சன் சயனைட் சாப்பிட்டு இறந்தபோதே உஷாராகியிருக்கவேண்டும்.

அதன்பிறகு இந்திரா நகர் வீட்டில் இரண்டு பேர்.

திரும்பவும் மாண்டியாவில் பன்னிரண்டு பேர்.

rajiv-killer_052111090248 சிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு!!: ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –24) rajiv killer 052111090248
சிவராசா, சுபா

இத்தனைக்குப் பிறகும் கோனனகுண்டேவில் சிவராசனையும் சுபாவையும் உயிருடன் பிடிக்க முடியாமல் போனதற்கு அதிகாரிகளின் மெத்தனமும் தயக்கமுமே அடிப்படையான காரணம்.

ஆயிரம் நியாயங்கள் சொல்லி உண்மையை மூடி மறைக்கலாம்.

ஆனால், எதையும் சாதிக்கவல்ல பயிற்சி பெற்ற கமாண்டோக்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு உத்தரவு கொடுக்காமல் சும்மா வீட்டுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வைத்ததை மன்னிக்கவே முடியாது!

சிவராசனின் மரணம் மட்டும் நிகழாதிருந்திருந்தால்  ராஜிவ் படுகொலை பற்றி மட்டுமல்ல.

தமிழகத்தில் எல்.டி.டி.ஈயின் முழுமையான நெட் ஒர்க் குறித்து சி.பி.ஐக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்திருக்கும்.

ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கைநழுவிப் போனது என்கிற வருத்தம் என்னைப் போன்ற புலனாய்வாளர்கள் அத்தனை பேருக்குமே அன்று இருந்தது!

suba சிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு!!: ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –24) suba

ஆனால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்கள். மேலதிகாரிகள் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும்.

அவர்கள் பேசுவதை அப்படியே கேட்டுக்கொள்ளவேண்டும்.

ராஜிவ் படுகொலைச் சம்பவத்துக்குப் பிறகு சிவராசன் மரணம் வரை சுமார் மூன்று மாத காலம் வீடு, குடும்பம், உறக்கம், ஓய்வு, உணவு என்று எதுவுமில்லாமல் இரவு பகலாகத் தேடுதலும் புலன் விசாரணையும் மட்டுமே வாழ்க்கையாக இருந்தவர்கள் நாங்கள்.

சிவராசன் உயிருடன் அகப்பட்டிருந்தால், அதுதான் எங்கள் பணிக்கு மாபெரும் பரிசாக இருந்திருக்க முடியும். பேசிப் பயனில்லை. நடந்தது என்னவென்று உலகுக்குத் தெரியும்!

சிவராசன் குழுவினர் அந்த வீட்டில்தான் இருக்கிறார்கள் என்பது உறுதியானதும் சி.பி.ஐயும் கறுப்புப் பூனைப் படையினரும் கோனனகுண்டேவுக்கு விரைந்தனர்.

டெல்லி மேலிடங்களுக்கும் செய்தி சொல்லப்பட்டது.

kunakunda சிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு!!: ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –24) kunakundaஇதுதான் இடம். இதுதான் இறுதிநாள்.

இன்று, அல்லது என்றுமில்லை! நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம்.

முந்தைய தவறுகள் ஏதும் இந்த முயற்சியில் திரும்ப ஏற்படக்கூடாது என்பது ஒருபுறமிருக்க, உள்ளே இருப்பவர்களைக் குறைத்து எடை போட்டுவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம்.

சிவராசனிடம் ஆயுதங்கள் இருந்தன. அவர் ஏகே 47 வைத்திருந்தார். ஒரு பிஸ்டலும் வைத்திருந்தார்.

தவிரவும் உடனிருக்கும் மற்றவர்களிடம் வேறு ஆயுதங்கள் இருக்கக்கூடும்.

என்னவென்று நமக்கு முழுமையாகத் தெரியாத போது, மாண்டியாவில் நடந்தது போல அதிரடி நிகழ்த்தி, அவர்கள் சயனைடு சாப்பிடுவார்கள், ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் செல்லலாம் என்று மட்டுமே எண்ணிக்கொண்டு போகமுடியாது.

சயனைட் அருந்துவதற்குமுன்னால் அவர்களைப் பிடிக்க வேண்டும். போலீஸ் தரப்பிலும் அவர்கள் தரப்பிலும் சேதாரங்களையும் தவிர்க்க வேண்டும்!

காத்திருந்தோம். எந்தக் கணமும் அதிரடியாக உள்ளே நுழைவதற்கு கறுப்புப் பூனைகளும் தயாராக இருந்தார்கள்.

ஆனால் அப்படியான அதிரடி முயற்சிகள் ஏதும் வேண்டாம் என்று டெல்லியிலிருந்து தகவல் வந்தது!

எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

thanu சிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு!!: ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –24) thanuThe LTTE suicide bombre  Dhanu who killed Rajive Gandhi

வேறென்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்?

அன்பாகப் பேசி வெளியே வரச் சொல்லவா? அல்லது சாகும்வரை காத்திருந்துவிட்டு, பிறகு உள்ளே புகுந்து பிணத்தை எடுத்து வரவா? மிருதுளாவை  உள்ளே அனுப்பி முதலில் பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று ஓரெண்ணம் தோன்றியது.

ஆனால் வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.

ஒருவேளை போலீஸ் வந்திருக்கும் விஷயம் சிவராசனுக்குத் தெரிந்திருக்குமானால், மிருதுளாவை அவர் பிணைக்கைதியாகப் பிடித்துவிடக் கூடும்.

வேறேதேனும் வகையில் உயிர்ச்சேதம் இல்லாமல் அவர்களை மயக்கமடைய வைத்து, பிறகு பிடிக்க முடியுமா என்றெல்லாம் ஆலோசித்தார்களே தவிர, அதிரடிப்படையை உடனே உபயோகிக்கும் எண்ணமே மேலதிகாரிகளுக்கு இல்லை.

இது மிகவும் பொறுமையைச் சோதிப்பதாக இருந்தது. இரவு முழுவதும் அந்த வீட்டைச் சுற்றி வெறுமனே நின்றுகொண்டிருந்தோம். உள்ளே துளி சத்தமும் இல்லை.

ஆள்கள் இருப்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் அவர்கள் மிகவும் கவனமாகவே இருந்தார்கள். வெளியே கேட்கிற ஒவ்வொரு சத்தத்தையும் அசைவையும் அவர்கள் கவனிக்கக்கூடும் என்று நினைத்தோம்.

ஏற்கெனவே, சின்ன சாந்தன் கைதாகி, அளித்த வாக்குமூலத்தில், யாராவது ஒருவர் காவலுக்கு நில்லாமல் சிவராசன் தூங்கமாட்டார் என்று சொல்லியிருந்தார்.

எனவே அசம்பாவிதங்கள் இன்றி இந்த ஆப்பரேஷன் முடியவேண்டுமே என்று கவலையாக இருந்தது.

மாலை நேரம் அந்தச் சாலை வழியே சென்ற ஒரு டிரக் வண்டி பழுதாகி நின்றது. உள்ளே இருந்த ஆள்கள் கீழே இறங்கினார்கள்.

அதனால் ஏற்பட்ட சிறு சலசலப்பில், அந்த வீட்டுக்குள் இருந்த சிவராசன் குழுவினர் விழித்துக்கொண்டார்கள்.

உடனே சரமாரியாகச் சுடத் தொடங்கினார்கள். சுமார் அரைமணிநேரம் இந்தத் துப்பாக்கிச் சூடு நீடித்தது.

கறுப்புப் பூனைப் படைகளும் திரும்பச் சுட்டார்கள்.

இதற்குள் டெல்லியில் இருந்து இன்னும் கொஞ்சம் சிறப்பு அதிரடிப்படை வீரர்களை அனுப்பிவைத்திருப்பதாகச் செய்தி வந்தது!

எதற்கு? புரியவில்லை.

தாக்குதல் வேண்டாம் என்று உத்தரவிட்டுவிட்டு வீரர்களை அனுப்பும் லாஜிக் சுத்தமாகப் புரியவில்லை.

ஆனால் தாக்கவேண்டியது எங்களுக்குக் கட்டாயமாகிப் போனது.

தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்ட அந்த எதிர்த்தாக்குதலில் இரண்டு அதிரடிப் படை வீரர்களுக்கு குண்டடி பட்டது.

டாக்டர், சயனைட் முறியடிப்பு மருந்து, ஆம்புலன்ஸ் என்று சகல ஏற்பாடுகளும் அந்தப் பத்தொன்பதாம் தேதி காலை வேளையில் அந்த வீட்டு வாசலுக்கு வந்துவிட்டன.

அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த குண்டுச்சத்தம் அப்போது அடங்கிவிட்டது.

இதற்குமேல் காத்திருக்க வேண்டாம் என்று முடிவு செய்து அதிரடிப் படையினரை உள்ளே போகக் கேட்டுக்கொண்டோம். டெல்லியிலிருந்து வந்திருந்த என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் அவர்கள்.

யாருக்கும் நம்பிக்கை இல்லை. இது பிழை. பெரும்பிழை. ஒரு முழு இரவு அவர்களூக்கு அவகாசம் கொடுத்து, காலை விடிகிற நேரம் கதவைத் தட்டுவதை என்னவென்று சொல்ல?

உடன் இருந்த கமாண்டோக்களை, அவர்களது திறமையை எங்கள் அதிகாரிகளே நம்பாத அபத்தம் அது.

வேறு வழியில்லாமல் இறுதிக்கட்ட நடவடிக்கையை அன்று காலை எடுக்க, வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது பிணங்களே எங்களை வரவேற்றன.

d83176623387f37d1a19ec26a87811d56e68668c-tc-img-preview சிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு!!: ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –24) d83176623387f37d1a19ec26a87811d56e68668c tc img previewSivarasan, the mastermind in the assassination plot, shot himself dead at a hideout in Konankunte, Bengaluru on August 20, 1991.

சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், டிரைவர், அம்மன் மற்றும் ஜமுனா என்கிற ஏழு பேரின் உடல்கள் அங்கே கிடந்தன.

ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்!

அதிர்ச்சி என்று சொல்லமாட்டேன்.

அந்த இரவு முழுவதும் நாங்கள் வெறுமனே அந்த வீதியில் காத்திருக்க நேர்ந்தபோதே இதுதான் நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிட்டது.

என்ன காரணம் என்று தெரியாமலேயே நடவடிக்கை எடுக்க முடியாமல் கைகட்டி நின்றிருந்த அவலத்தை நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் ஒரு திருப்தி இருந்தது.

kittu09zu-721697 சிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு!!: ஆறு பேர் சயனைட் அருந்தி உயிர்விட்டிருக்க, சிவராசன் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்திருந்தார்! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –24) kittu09zu 721697

‘இந்திய போலீஸ் முடிந்தால் கொலையைச் செய்தது யாரென்று கண்டுபிடிக்கட்டும்’ என்று லண்டனில் உட்கார்ந்துகொண்டு அறிக்கை விட்டாரே கிட்டு! அதை நாங்கள் செய்தோம்.

வெற்றுப் பலகை போல் இருந்த வழக்கில் ஆரம்பமே எதுவென்று தெரியாமல் தேடத் தொடங்கி, மூன்று மாத காலத்துக்குள் கொலைக் குற்றத்தில் சம்பந்தமுள்ள அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் (சிவராசன் மரணத்துக்குப் பிறகு ரங்கன், சுசீந்திரன், அறிவு, இரும்பொறை, என்று பலபேரை அடுத்தடுத்துப் பிடித்துவிட முடிந்தது.

ஏற்கெனவே பிடிபட்டு விசாரணையில் இருந்தவர்கள், ‘ரிசர்வ்’ செய்து வைத்திருந்த தகவல்களையும் அதன்பின் ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.

திருச்சி சாந்தனின் இருப்பிடத்தை ஒருவழியாக ரங்கன் மூலம் பிடித்து, அவரைப் பிடிக்கச் சென்று முடியாமல் அவர் சயனைட் அருந்தி உயிர் விட்டார்)  சில சயனைட் மரணங்களைத் தடுத்திருக்கலாம்.

அதிகாரிகளின் மெத்தனத்தாலும் தயக்கத்தினாலும் அது மட்டும் முடியாமல் போய்விட்டது.

ஒரு மாபெரும் தலைவரின் படுகொலை வழக்கை விசாரிக்கச் சென்று, நமது அரசு இயந்திரம் செயல்படும் விதத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ள அது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது என்னைப் பொருத்தவரை முக்கியமான விஷயம்தான்!

காவல் துறை என்கிறோம், உளவுத்துறை என்கிறோம், அதிரடிப் படை என்கிறோம். சர்வ வல்லமை பொருந்திய சட்டம் என்கிறோம். நீதி, நேர்மை, வாய்மை என்று என்னென்னவோ சொல்கிறோம்.

ஆனால் அனைத்துத் தளங்களிலும் சீராக்கப்படவேண்டிய அம்சங்கள் ஆயிரம் ஆயிரம் உள்ளன என்னும் பேருண்மை எனக்கு இந்த வழக்கின்மூலம் தெரியவந்தது.

நமது நாட்டுக்கு அந்நிய சக்திகள் மூலம் உள்ள அபாயங்களைக் காட்டிலும் நம்மிடத்திலேயே உள்ள அபாயங்கள் அதிகம்.

இந்த ஒரு வழக்கை மட்டும் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். எத்தனை எத்தனை சிடுக்குகள்!

புலன் விசாரணையின்போதும் சரி, பின்னால் வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றபோதும் சரி. ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரி என்னும் முறையில் எனக்கு வழக்கு சுத்தமாக முடிந்த திருப்தியைக் காட்டிலும், முடிந்தபின் மனத்தில் மேலோங்கிய கசப்புகளே அதிகம்.

விவரித்துத் தீராதவை அவை.

மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : 

பெங்களூர் நகரத்தில் ஒளிந்திருந்த சிவராசனையும் சுபாவையும் நெருங்கிய பொலிசார்!!

maranammm பெங்களூர் நகரத்தில் ஒளிந்திருந்த சிவராசனையும் சுபாவையும் நெருங்கிய பொலிசார்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –23) maranammm
விசாரணையில் மேற்கொண்டு முன்னேற, முன்னேற, பெங்களூர் நகரமே விடுதலைப் புலிகளின் மாபெரும் கூடாரமாகிக்கொண்டிருந்த விஷயம் பிடிபட்டது.

இந்திரா நகர் மட்டுமல்லாமல் தோமலூரிலும் அவர்களுக்கு இன்னொரு மறைவிடம் இருக்கும் விஷயம் தெரியவந்தது.

இதனிடையே, பெங்களூரில் ரங்கநாத் என்ற ஒரு தொழிலதிபரின் லேத் பட்டறையைப் புலிகள் வாங்குவதற்கான பேரம் பேசப்பட்டிருந்தது.

இந்த விஷயம் சி.பி.ஐக்கு முதலில் தெரியாது.

ரங்கநாத்துக்குத் தொழில் நஷ்டம்.

பண நெருக்கடி. புலிகளுக்கோ, ஆயுதங்கள் செய்ய லேத் பட்டறை வேண்டும்.

எனவே இரு தரப்புக்கும் பொதுவான ஒரு பெங்களூர் தமிழ்த் தீவிரவாதி, சுரேஷ் மாஸ்டரையும் ரங்கநாத்தையும் சந்திக்க வைத்து முதல் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார்கள்.

தவிரவும் காயமடைந்த விடுதலைப் புலிகளைத் தங்கவைக்க புத்தனஹள்ளியில் இருந்த ரங்கநாத்தின் வீட்டை அவர்கள் உபயோகிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

அந்த வீட்டில்தான் சிவராசனையும் சுபாவையும் சுரேஷ் மாஸ்டர் தங்கவைத்திருந்தார்.

விடுதலைப் புலிகளைக் குறிவைத்துத் தேடிக்கொண்டிருந்த சி.பி.ஐக்கு, பெங்களூர் தோமலூர் வீட்டைத்தாண்டி நகரமுடியாமல் ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டது.

காரணம் இந்த ரங்கநாத். அவர் விடுதலைப் புலி அல்ல. அவரைப் பற்றி எங்களுக்கு யாரும் எந்தத் தகவலும் தந்திருக்கவில்லை.

அப்படியொரு பாதுகாப்பான இடத்துக்கு சிவராசனும் சுபாவும் போய்ச் சேர்ந்த விஷயமெல்லாம் பின்னால் வேறொரு வகையில் தற்செயலாகவே எங்களுக்குக் கிடைத்தது!

கோனனகுண்டே

ரங்கநாத் ஒரு விடுதலைப் புலி அல்ல.

இலங்கைத் தமிழரும் அல்லர்.

ஆனால் ராஜிவ் காந்தி படுகொலையில் தேடப்படும் மிக முக்கியக் குற்றவாளிகளுக்கு அவர் ஏன் அப்படி அடைக்கலம் தரவேண்டும்?

புலிகள் தந்த பணம் காரணமாயிருக்கலாமா என்றால், சிவராசன் இருப்பிடத்தை அவர் சொல்லியிருந்தால், காவல் துறையே அவருக்குப் பல லட்சங்கள் தந்திருக்குமே? நாங்கள் அறிவித்திருந்தோம்.

சிவராசனைக் கண்டுபிடிக்க உதவினால் பத்து லட்சம் ரூபாய்.

சுபாவின் இருப்பிடம் தெரிவித்தால் ஐந்து லட்சம் பரிசு.

பணக்கஷ்டத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் ரங்கநாத்துக்கு இதைவிடப் புலிகள் அதிக பணம் கொடுத்திருக்க முடியாதே.

போலீஸிடம் பயந்து அவர் பேசாதிருந்துவிட்டாரா? என்றால் புலிகள் மீது அவருக்குப் பயமில்லையா?

தனது புத்தனஹள்ளி வீடு தவிர மாண்டியாவில் வேறு இரு இடங்களிலும் அவர் காயமுற்ற விடுதலைப் புலிகளைப் பராமரிக்க வீடு பார்த்துக் கொடுத்திருக்கிறார்!

தெரிந்தே ஒரு பெரிய குற்றத்துக்குத் துணை போவதற்குத் தனியாகக் காரணங்கள் தேடிக்கொண்டிருக்க முடியாது. அது ஒரு மனப்பாங்கு. வினோத விருப்பம்.

தமிழ் உணர்வு என்பது அந்த விருப்பத்தின் தொடக்கமாக இருந்திருக்கலாம்.

ஆனால் தெரியாமல் செய்துவிட்ட குற்றம் என்று அதனை வருணிப்பதை என்னால் ஏற்கவே முடியாது. தெரிந்தே செய்த குற்றம்தான்.

ஏன் செய்தார், எது அவரைச் செய்யத் தூண்டியது என்பதைக் காட்டிலும் செய்த காரியத்தின் பரிமாணத்தை அவர் முழுதுமாக உணர்ந்தேதான் செய்தார் என்பதைப் பார்க்க, அவரது குற்றமும் பெரிதே.

இந்திரா நகர் வீட்டில் நடைபெற்ற அதிரடிச் சோதனை, அங்கே  இரண்டு  விடுதலைப் புலி இளைஞர்கள் சயனைட் அருந்தி இறந்தது பற்றி செய்தித்தாள்களில் பக்கம் பக்கமாகச் செய்தி வர, கர்நாடக மாநிலம் முழுதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டது.

நமக்குச் சம்பந்தமில்லாத யாரோ நமது மண்ணில் குற்றம் புரிந்துகொண்டிருக்கிறார்கள், நமக்கு இதனால் ஆபத்து வரும் என்கிற பயம் அவர்களிடையே பரவலாக இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, எங்கெல்லாம் தமிழர்கள் இருந்தார்களோ, எங்கெல்லாம் மாநிலத்தில் தமிழ்க்குரல் கேட்டதோ, அங்கெல்லாம் கன்னட மக்கள் கவனமுடனும் கூர்மையாகவும் உற்று நோக்க ஆரம்பித்தார்கள்.

சந்தேகத்துக்கு இடமாக எந்த நடமாட்டம் இருந்தாலும் உடனே காவல் துறைக்கு போன் செய்யத் தொடங்கினார்கள்.

இதன் தொடர்ச்சியாக மாண்டியா மாவட்டத்தில் உள்ள மூதடி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு, சில புதிய மனிதர்கள்மீது திடீரென்று சந்தேகம் உண்டாக ஆரம்பித்தது.

அவர்கள் அந்த கிராமத்துக்குப் புதிதாக வந்திருந்தவர்கள்.

வாடகைக்கு வீடு  எடுத்து வந்து தங்கியிருந்தவர்கள்.

சினிமா எடுக்கிறவர்கள் என்பதாக அவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அவர்களுக்கு அப்போது தெரியாது. (சி.பி.ஐக்கும் தெரியாது!) மூதடி போலவே பிரூடா என்ற கிராமத்திலும் அதே போன்ற சில புதியவர்கள் அப்போது வீடு எடுத்துத் தங்கியிருந்தார்கள்.

அந்தக் கிராமத்து மக்களுக்கும் அவர்கள்மீது லேசான சந்தேகம் இருந்தது. இவர்கள் ஆகஸ்ட் 18ம் தேதி தமது சந்தேகத்தை உள்ளூர் காவல் நிலையத்தில் புகாராகப் பதிவு செய்தார்கள்.

உள்ளூர் போலீசார் இந்த இரண்டு கிராமத்து வீடுகளுக்கும் பரிசோதனைக்காகச் செல்ல, அவர்கள் சற்றும் எதிர்பாராவிதமாக உள்ளே இருந்தவர்கள் சயனைட் கடித்துவிட்டார்கள்.

அப்போதுதான் அவர்கள் விடுதலைப் புலிகள் என்பதே போலீசுக்குத் தெரியும். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூதடியில் இருந்த வீட்டில் ஒன்பது பேர் இருந்தார்கள்.

பிரூடா வீட்டில் எட்டுப்பேர். ஆக, பதினேழு பேர். இவர்களுள் பன்னிரண்டு பேர் போலீசைப் பார்த்த மாத்திரத்தில் சயனைட் சாப்பிட்டு இறந்துவிட, மிச்சமிருந்த ஐவரும் மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்டார்கள்.

விஷயம் பெரிதாகிவிட்டது. எத்தனை சயனைட் மரணங்கள்! கர்நாடக காவல் துறை அதிகாரிகள் குழு உடனே மாண்டியாவுக்குச் சென்றது.

விசாரணையில், அந்த இரு வீடுகளையும் வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தவர்  தொழிலதிபர் ரங்கநாத் என்பது தெரியவந்தது. ரங்கநாத்? அப்போதுதான் அந்தப் பெயர் எங்கள் கவனத்துக்கே வருகிறது.

தமிழ்ப் பெயர்.

ஆனால் இலங்கைத் தமிழர் வைத்துக்கொள்ளும் விதமாக இல்லை.

தவிரவும் அவர் ஒரு தொழிலதிபர் என்று சொல்லப்பட்டது. அவர் தொடர்புடய ஒரு பெங்களூர் முகவரியும் கிடைத்தது.

அதற்குமேல் தாமதிக்காமல் அவரது தொழிற்சாலை, புத்தனஹள்ளி வீடு என்று அடுத்தடுத்து முகவரி பிடித்து அவரை நெருங்க போலீசுக்கு அதிக அவகாசம் பிடிக்கவில்லை.

pavchar பெங்களூர் நகரத்தில் ஒளிந்திருந்த சிவராசனையும் சுபாவையும் நெருங்கிய பொலிசார்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –23) pavchar

ஆனால் பெங்களூர் போலீஸ், புத்தனஹள்ளி வீட்டுக்குச் சென்ற சமயம் அவர்கள் அங்கிருந்து தப்பித்து, ரங்கநாத்தின் மனைவி மிருதுளாவின் சகோதரர் வீட்டுக்குப் போயிருந்தார்கள்.

அதையும் அன்றே தேடிக் கண்டுபிடித்து அன்று (ஆகஸ்ட் 18) மாலையே மிருதுளாவைப் பிடித்தார்கள்.

மனைவியை அங்கே விட்டுவிட்டு கோனனகுண்டேவுக்குத் தனியே புறப்பட்டுப் போன ரங்கநாத்தை உள்ளூர்ப் பெண்மணி ஒருவர் அடையாளம் கண்டு, காவல் துறையிடம் சொல்லிவிட, தப்பியோட முயன்ற அவரையும் கைது செய்தார்கள்.

ராஜிவ் கொலைவழக்கில் எங்களிடம் வாக்குமூலம் அளித்த அத்தனை பேரைக் காட்டிலும் ரங்கநாத்தின் மனைவி மிருதுளா தாமாக விரும்பி அளித்த வாக்குமூலம் என்னைப் பொருத்தவரை மிகவும் முக்கியமானது.

இந்த வழக்கில் இந்தப் பெண்மணி ஒரு முக்கியமான பாத்திரம்.

தமது கணவரின் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு, பதினாறு நாள்கள் விடுதலைப் புலிகளுக்கு அவர் அடைக்கலம் அளித்திருந்தார்.

போலீசைக் கண்டதும் மடை திறந்த வெள்ளம் போல் தனது மனத்தில் இருந்த அத்தனையையும் ஒப்பித்துவிட்டார்.

வாக்குமூலங்கள் அனைத்தையும் அப்படியே உண்மையென்று எந்தக் காவல் அதிகாரியும் நம்பிவிட மாட்டார்.

ராஜிவ் கொலை வழக்கில் எங்களுக்கு வாக்குமூலம் அளித்த அத்தனை பேருமே ஓரளவு உண்மையையும் தாங்கள் தப்பிப்பதற்கான சாத்தியங்கள் உள்ள இடங்களை ஃபோக்கஸ் செய்யும் விதமாகவும்தான் பேசியிருந்தார்கள்.

பலபேரின் வாக்கு மூலங்களைத் தனித்தனியே வாங்கும்போது ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்ப்போம். அனைவரது வாக்குமூலமும் பொருந்திப் போகும் இடங்களை மட்டுமே உண்மை என்பதாக எடுத்துக்கொள்வது வழக்கம்.

 

வித்தியாசங்கள் இருக்குமிடங்களை வட்டமிட்டு, திரும்பவும் துப்புறவாக விசாரிக்கத் தொடங்குவோம்.

இதுதான் நடைமுறை. ஆனால் மிருதுளா அளித்த வாக்குமூலம், முற்றிலும் வேறு வகையானது.

தன் மனத்தை அரித்துக்கொண்டிருந்த ரகசியங்களை எப்படியாவது இறக்கிவைத்தால் போதும் என்கிற தவிப்புடன் அவர் பேசினார். அவரது பேச்சில் பொய் இல்லை.

அது அவர் கண்ணிலேயே தெரிந்தது. சிவராசன் கூட்டத்தினரை நெருங்குவதற்கு இறுதியில் எங்களுக்கு உதவி செய்தது மிருதுளாதான். அந்தப் பதினாறு நாள் நரக அனுபவம் குறித்து அவர் விவரித்த தகவல்கள்தாம்.

p26-680x365 பெங்களூர் நகரத்தில் ஒளிந்திருந்த சிவராசனையும் சுபாவையும் நெருங்கிய பொலிசார்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –23) p26நடந்ததை இப்படி வரிசைப்படுத்தலாம்: பெங்களூரில் விடுதலைப் புலிகள் தங்குவதற்கும் சிகிச்சை எடுப்பதற்கும் சில மறைவிடங்கள் வேண்டியிருந்தன.

அதனை ஏற்பாடு செய்வதற்காக அலைந்துகொண்டிருந்த சமயம், ரங்கநாத்தைப் பற்றி உள்ளூர் திராவிடர் கழகப் பிரமுகர்கள் சிலர் மூலம் சுரேஷ் மாஸ்டருக்குத் தெரியவந்திருக்கிறது.

நலிந்த தொழிலதிபர் ரங்கநாத். பணத்தேவையால் அல்லாடிக்கொண்டிருந்த ரங்கநாத். தமிழர். தவிரவும் தமிழ் உணர்வாளர்.

எனவே அவரை நெருங்கவும் உதவி கோரவும் பெரிய சிரமங்கள் இருக்கவில்லை.

ரங்கநாத்துக்கு புத்தனஹள்ளியில் ஒரு வீடும் கோனனகுண்டேவில் ஒரு வீடும் இருந்தன.

புத்தனஹள்ளி வீட்டைத்தான் சிவராசன் குழுவினர் தங்குவதற்கு அவர் அளித்திருந்தார். மிருதுளாவுக்கு இது பிடிக்கவில்லை.

ஆனாலும் கணவரின் வற்புறுத்தலால் பேசாமல் இருந்திருக்கிறார்.

அந்த வீடுகள் போதாமல், மாண்டியாவில் மலைப்பகுதியில் வேறு இரண்டு வீடுகள் எடுக்கவும் ரங்கநாத் முன்னின்று ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த வீடுகளில் பல விடுதலைப் புலிகள் வந்து தங்க ஆரம்பித்தார்கள்.

சென்னையிலிருந்து வெளியேற வழி தேடிக்கொண்டிருந்த சிவராசனையும் சுபாவையும் ஒரு டேங்கர் லாரியில் ஒளித்துவைத்துபெங்களூருக்கு அனுப்ப ஆவன செய்த திருச்சி சாந்தன், அவர்களை இந்த ரங்கநாத்தின் புத்தனஹள்ளி வீட்டில்தான் தங்க வைத்திருந்தார்.

ஏற்பாடுகள் செய்தது, சுரேஷ் மாஸ்டர். வீட்டுக்கு வரும்போது ரங்கநாத்துக்கு அவர்கள் சிவராசன், சுபா என்பது தெரியாது.

அதாவது ராஜிவ் கொலையாளிகள் என்பது தெரியாது. ஆனால் பேப்பரில் புகைப்படங்கள், தொலைக்காட்சி செய்திகள் பார்த்தபிறகு, கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறோம் என்கிற மெல்லிய பதற்றம் உருவாகியிருக்கிறது.

அவரது மனைவி மிருதுளாவுக்கு இது முற்றிலும் பயத்தையும் கலவரத்தையும் கொடுத்திருக்கிறது.

அவர்களை உடனே வெளியேறச் சொல்லி அவர் தம் கணவரிடம் கேட்க, அவர் ஏதேதோ சொல்லி, சமாதானப்படுத்தியிருக்கிறார்.

இந்திரா நகர் வீட்டில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக, செய்தி வெளியே வந்துவிட, சிறப்புப் புலனாய்வுக்குழு பெங்களூருக்கு மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துவிட்ட விஷயம் ரங்கநாத்துக்குப் புரிந்துவிட்டது.

மாண்டியா கிராமத்தில் நிகழ்ந்த பன்னிரண்டு சயனைட் மரணங்களை மறுநாள் பேப்பரில் படித்ததுமே அவருக்குத் தீர்மானமாகிவிட்டது. எப்படியும் மாட்டிக்கொள்வோம்.

‘அவர்கள் மோப்பநாய் மாதிரி நம்மைத் துரத்துகிறார்கள். இங்கும் வந்துவிடுவார்கள். உடனே புறப்படவேண்டும்’ என்று மிருதுளாவிடம் சொல்லிவிட்டுத்தான் புத்தனஹள்ளி வீட்டிலிருந்து கிளம்பி, கோனனகுண்டே வீட்டுக்குப் போயிருக்கிறார்கள்.

முன் தினம் வரை அவர்கள் புத்தனஹள்ளியில் சிவராசன் குழுவினர் தங்கியிருந்த வீட்டில்தான் இருந்திருக்கிறார்கள். விஷயம் கைமீறிக்கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்திருந்தது.

மிருதுளாவால் ஏதாவது பிரச்னை வரலாம் என்று சிவராசனுக்குத் தெரிந்திருந்தது.

உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவரை (மிருதுளாவுக்கு ஆஸ்துமா தொந்தரவு) மருத்துவமனைக்குப் போகக்கூட அனுமதிக்கமாட்டேன் என்று சிவராசன் கூறியிருக்கிறார்.

ரங்கநாத், தாம் பார்த்துக்கொள்வதாகச் சொல்லித்தான் மிருதுளாவை வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார்.

மருத்துவமனைக்குப் போய்விட்டு அங்கிருந்து புத்தனஹள்ளி வீட்டுக்கு அவர்கள் செல்ல, அதற்குள் மாண்டியா சம்பவம் தெரிந்துவிட்ட படியால் கோனனகுண்டேவில் வாடகைக்கு எடுத்த புதிய வீட்டுக்குப் போகும்படியானது. நடந்தது இதுதான்.

கர்நாடகக் காவல் அதிகாரிகள் மிருதுளாவிடம், இப்போது சிவராசனும் சுபாவும் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டார்கள். ‘கோனனகுண்டே வீட்டில்தான் இருக்கிறார்கள். என்னோடு வந்தால் காட்டுகிறேன்!’ என்று அவர் சொன்னார்.

அந்த ஆகஸ்ட் 18ம் தேதி இரவை மறக்கவே முடியாது.

ஒரே ஒரு போலீஸ் ஆபீசரை மட்டும் ஒரு வாடகை காரில் அழைத்துக்கொண்டு மிருதுளா கோனனகுண்டேவுக்குச் சென்றார்.

சிவராசன் பதுங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு வீட்டின் பாத்ரூமிலிருந்து அந்த அதிகாரி பார்த்தார்.

மே 21ம் தேதி இரவு தப்பித்துக் காணாமல் போன சிவராசன், சுபா மட்டுமல்லாமல் நேரு என்கிற இன்னொரு விடுதலைப் புலி உறுப்பினர், சுரேஷ் மாஸ்டர், ரங்கன், அம்மன், ஜமுனா ஆகியோரும் அந்த வீட்டில்தான் அப்போது இருந்தார்கள்!

மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : 

செல்வி ஜெயலலிதாவுக்கு.. ‘நீங்கள் எங்களுக்கு விரோதியல்ல’

என கடிதம் எழுதிவைத்துவிட்டு சயனைட் சாப்பிட்டு,

தங்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு இறந்தபோன விடுதலைப்புலிகள்!

செல்வி ஜெயலலிதாவுக்கு.. ‘நீங்கள் எங்களுக்கு விரோதியல்ல” என கடிதம் எழுதிவைத்துவிட்டு சயனைட் சாப்பிட்டு, தங்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு இறந்தபோன விடுதலைப்புலிகள்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –22)

சிவராசனைத் தேடும் பணிகளுக்கு இடையில் அவ்வப்போது கைதாகிக்கொண்டிருந்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்ட  வேறு பலபேரைப் பற்றிய விவரங்கள் எங்களுக்கு இன்னொரு பக்கம் கிடைத்துக்கொண்டிருந்தன.

முருகன், ஜெயக்குமார், விஜயன் போன்றவர்களை விசாரித்து ராபர்ட் பயஸைப் பிடித்திருந்தோம்.

Robert_Payas செல்வி ஜெயலலிதாவுக்கு.. ‘நீங்கள் எங்களுக்கு விரோதியல்ல" என கடிதம் எழுதிவைத்துவிட்டு சயனைட் சாப்பிட்டு, தங்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு இறந்தபோன விடுதலைப்புலிகள்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –22) Robert Payasராபர்ட் பயஸ்

ராபர்ட் பயஸ் அளித்த தகவலின் அடிப்படையில் கிண்டி ஐ.டி.ஐயில் படிப்பதற்காகச் சேர்ந்த காந்தனின் புகைப்படத்தை, அவனது அப்ளிகேஷன் ஃபாரத்திலிருந்து பெற்றோம்.

காந்தன், டிக்சனுடன் 1990 செப்டம்பரில் இந்தியாவுக்கு வந்தவன். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் வயர்லெஸ் ஆப்பரேட்டராகப் பணியாற்றியவன்.

காந்தனும் டிக்சனும் ஒன்றாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்தது. திருச்சி சாந்தனுக்கு நெருக்கமானவனான டிக்சனைப் பிடித்தால் சிவராசனின் இருப்பிடம் தெரிந்துவிடும்.

ஆனால் டிக்சனை எப்படிப் பிடிப்பது? யோசித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக ஐ.பியிலிருந்து எங்களுக்கு டிக்சனின் படம் என்று ஒரு புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்டது.

அதையும் காந்தனின் புகைப்படத்தையும் சேர்த்துப் பத்திரிகைகளில் பிரசுரிக்கக் கொடுத்து, யாருக்கு என்ன தகவல் கிடைத்தாலும் சொல்லுங்கள் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டோம்.

முதல் முதலாக, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினை சேர்ந்த இருவரின் படங்களை நாங்கள் அப்போதுதான் வெளியிடுகிறோம். இது, எங்களுக்கு நல்ல பலனைக் கொடுத்தது. கோயமுத்தூரில் இருந்து ஒருவர் போன் செய்தார்.

‘சார், நான் இவரைப் பார்த்திருக்கிறேன். சாய்பாபா காலனியில் உள்ள ஒரு டெலி போன் பூத்துக்கு அடிக்கடி வருவார்’ என்று சொன்னார். உடனே உஷாரானோம்.

சேலத்திலிருந்து ஒரு குழுவை கோவைக்கு அனுப்பினோம். சென்னையிலிருந்தும் சிலர் புறப்பட்டுச் சென்றோம்.

முன்னதாக, கோயமுத்தூரில்தான் டிக்சன் இருக்கிறான் என்பது நிச்சயமானால், கண்டிப்பாக வயர்லெஸ் கருவியை இயக்க முயற்சி செய்வான், அதன்மூலம் தொலைக்காட்சி சிக்னலில் இடைஞ்சல் ஏற்படும் என்பதை யூகித்து, கோவை மக்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்க ஏற்பாடு செய்தோம்.

டிவி பார்க்கும்போது ஏதாவது இடைஞ்சல் ஏற்பட்டால் உடனே தகவல் சொல்லவும். அதே சமயம் கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது.

போக்குவரத்துப் போலீசார் தமது வழக்கமான பரிசோதனையில் ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி விசாரிக்க, அதில் பயணம் செய்த இருவரின் பெயர்கள் விக்கி மற்றும் ரகு என்று தெரிந்தது. ஈழத் தமிழர்கள். புலிகள்.

துடியலூர் அருகே முனுசாமி நகரில் வசிப்பவர்கள். மேற்கொண்டு விசாரித்துக்கொண்டிருக்கும்போதே துடியலூர் காவல் நிலையத்துக்கு  ஒருவர் வந்து டிவி பார்க்கும்போது படம் ஆடுகிறது, கரபுரவென்று அலையடிக்கிறது என்று சொன்னார்.

அந்த விக்கி, ரகு இருவரையும் விசாரித்ததில் அவர்கள் டிக்சனுடன் இருந்தவர்கள் என்பது தெரிந்துவிட்டது. உடனே உஷாரானோம். அனைத்து இடங்களுக்கும் தகவல் கொடுத்து, மறுநாள் காலை முனுசாமி நகர் வீட்டை முற்றுகையிட ஆவன செய்தோம்.

விக்கியும் ரகுவும் பிடிபட்டது முந்தைய தினத்து இரவு. அவர்கள் மீது சந்தேகம் வந்து, விசாரித்து, அவர்கள் விடுதலைப் புலிகள்தாம் என்பது உறுதியாகி, மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு முழு இரவு தேவைப்பட்டது.

அந்த இடைவெளியில், வெளியேபோன விக்கியும் ரகுவும் என்ன ஆனார்கள் என்று தெரியாத டிக்சன், சந்தேகப்பட்டு உஷாராகத் தொடங்கியிருந்தான்.

மறுநாள் காலை அந்த முனுசாமி நகர் வீட்டை முற்றுகையிட்ட கோவை போலீசார் உள்ளே இருக்கும் டிக்சனுடன் வெளியில் இருந்தபடியே பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

அவர்களை உயிருடன் பிடிப்பதுதான் நோக்கம். பேசிப்பேசி காலதாமதம் செய்வதன்மூலம், சடாரென்று உள்ளே பாய்ந்து அவர்கள் சயனைட் அருந்திவிடாமல் பிடிப்பதற்கான முயற்சி.

வேறு வழியில்லை.

எங்களுக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல் டிக்சன் வேண்டியிருந்தான். அவனைக்கொண்டுதான் திருச்சி சாந்தன் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.

திருச்சி சாந்தன் கிடைத்தால்தான் சிவராசன் அகப்படுவார்.

ஆனால் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை.

1610-3-a63bf6819642177138fa3d6f5b352cdd செல்வி ஜெயலலிதாவுக்கு.. ‘நீங்கள் எங்களுக்கு விரோதியல்ல" என கடிதம் எழுதிவைத்துவிட்டு சயனைட் சாப்பிட்டு, தங்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு இறந்தபோன விடுதலைப்புலிகள்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –22) 1610 3 a63bf6819642177138fa3d6f5b352cddவிடுதலைப் புலிகளுக்கு உயிர் ஒரு பொருட்டாக எப்போதும் இருந்ததில்லை என்று கேள்விப்பட்டிருந்ததை அப்போது நேரில் கண்டோம்.

வீட்டுக்குள் டிக்சன் மட்டுமன்றி, குணா என்ற இன்னொரு விடுதலைப்புலியும் இருந்தான். இருவரும் போலீசாருடன் பேச்சுக்கொடுத்தபடியே (போலீஸ் கடைப்பிடித்த அதே உத்தி!) தங்கள் ஆதாரங்களை எரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சக்தி மிக்க வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர்கள், பணம், பிலிம் ரோல்கள் என்று பலதையும் எரித்து முடித்துவிட்டு, இனி பிரச்னையில்லை என்றானதும் சயனைட் சாப்பிட்டுவிட்டார்கள்.

எங்கே அதை முறியடித்துவிடுவோமோ என்று அஞ்சி, ஒரு கைத்துப்பாக்கியால் தங்களைச் சுட்டுக்கொண்டு, போதாக்குறைக்கு வெடிகுண்டு ஒன்றையும் வெடிக்கச் செய்து இல்லாமல் போனார்கள்.

சி.பி.ஐக்கு இது மிகப்பெரிய அடி. நாங்கள் எதிர்பார்த்திராத விஷயம். சயனைட் முறியடிப்பு மருந்து எங்கள் கைவசம் இருந்தது. ஒருவேளை அசம்பாவிதம் நேர்ந்தாலும் காப்பாற்றிவிட ஒரு டாக்டரும் உடன் இருந்தார்.

ஆனாலும் மிகச் சில நிமிடங்களுக்குள் நடந்துவிட்ட இந்தச் சம்பவத்தில் இடிந்து போனோம்.

இறந்து போன டிக்சன் இரண்டு கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு இறந்திருந்தான். ஒன்றில் ‘திரு. கார்த்திகேயன் அவர்களே, தங்கள் திறமைக்கு என் பாராட்டுக்கள்’ என்று சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு எழுதப்பட்ட துண்டுக் கடிதம்.

இன்னொன்று, அ.தி.மு.க. தலைவர் செல்வி ஜெயலலிதாவுக்கு. ‘நீங்கள் எங்களுக்கு விரோதியல்ல’ என்று அதில் குறிப்பிட்டிருந்தான்.

விடுதலைப் புலிகளால் ஜெயலலிதா உயிருக்கு ஆபத்து என்று தமிழகத்தில் தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது.

புலிகளுக்கு எதிரான அவரது பேச்சுகளால் அவர்கள் கோபமடைந்திருக்கக்கூடும்.

அவர்களுடைய ஹிட் லிஸ்டில் ஜெயலலிதா உள்ளார் என்று தினசரி பத்திரிகைகளில் செய்திகள் வந்துகொண்டிருந்த தருணம்.

டிக்சன், ஜெயலலிதாவின்மீது தங்களுக்கு விரோதமில்லை என்று தெளிவாக எழுதிவைத்துவிட்டு இறந்திருந்தான்!

ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்துக்குப் பிறகு ஆரம்பித்த புலனாய்வுப் பணியில் நாங்கள் எதிர்கொண்ட முதல் சயனைட் மரணம் டிக்சனுடையதுதான்.

இது எங்களுக்குப் பெரிய எச்சரிக்கையாக அமைந்தது. விடுதலைப் புலிகளை அடையாளம் காண்பதோ, தேடி நெருங்குவதோ, சுற்றி வளைப்பதோ பெரிய விஷயமல்ல.

அவர்களை உயிருடன் பிடிப்பதில்தான் எங்களுடைய சவால் அடங்கியிருக்கிறது என்பது புரிந்துவிட்டது.

முன்னதாக, பிடிபட்ட விக்கி, ரகு இருவரையும் விசாரித்ததில், கோயமுத்தூரில் விடுதலைப் புலிகளுக்கு வெடிகுண்டுகள் தயாரித்து அளிக்கும் ஒரு தொழிற்சாலை குறித்த விவரங்கள் எங்களுக்குக் கிடைத்தன.

பல உள்ளூர் மெக்கானிக்குகளின் உதவியுடன் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பெட்டி பெட்டியாக வேதாரண்யம் வழியே இலங்கைக்குக் கடத்தப்பட்டுக்கொண்டிருந்ததை அறிந்தோம்.

தமிழகம் அமைதிப்பூங்காதான். அனைத்து சமூக விரோதப் பணிகளும் இங்கே அமைதியாகவே பலகாலமாக நடந்துவந்திருக்கிறது! இறந்தவர்களை எண்ணிப் பலனில்லை.

பிடிபட்ட விக்கியை மேலும் துருவித் துருவி விசாரிக்கத் தொடங்கினோம். ஒரு வழியாக திருச்சி சாந்தன், திருச்சியில் ராமலிங்க நகர் என்னும் பகுதியில் வசிக்கும் விவரம் தெரிந்தது.

ஆனால் அவர் ஓரிடத்தில் தங்கியிருக்கும் நபரல்லர். திருச்சி, சேலம், சென்னை, பெங்களூர் என்று சுற்றிக்கொண்டே இருப்பவர். சாந்தனின் முதன்மை உதவியாளராக சுரேஷ் மாஸ்டர் என்பவர் இருந்தார்.

அவர் காயமுற்ற, மருத்துவ உதவி தேவைப்படும் விடுதலைப் புலிகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்தவர். சென்னையில்தான் அவரது தங்குமிடம் என்பதும் தெரிந்தது.

ஆனால் அந்தச் சமயம் திருச்சி சாந்தன் எங்கே இருக்கிறார்? அவர் பெங்களூரில் இருக்கக்கூடும் என்று விக்கி சொன்னான்.

சில நாள்கள் முன்னதாக ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் தான் பெங்களூர் சென்று சாந்தனைச் சந்தித்துக் கொடுத்துவிட்டு வந்ததையும் தெரிவித்தான்.

எனவே நாங்கள் பெங்களூருக்கு விரைந்தோம். இந்திரா நகரில் இருந்தது அந்தக் குறிப்பிட்ட வீடு. அமைதியான, தனியான, சிறு வீடு. சுற்றி வளைத்துத் தயாராக நின்றுகொண்டு ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி அழைப்பு மணியை அழுத்தச் சொன்னோம்.

ஒரு கணம் ஜன்னல் திறந்து ஒரு உருவம் எட்டிப் பார்த்தது. அவ்வளவுதான். தாமதமின்றி கறுப்புப் பூனைப் படையினர்

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. அரசன், குளத்தான் என்று உள்ளே இருந்த இரண்டு இளைஞர்களும் சயனைட் சாப்பிட்டுவிட்டார்கள்.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட விஷ முறிவு மருந்தினால் பயனில்லாமல் போய்விட்டது. ஒருவன் உடனேயும் இன்னொருவன் மூன்று நாள் மயங்கிய நிலையில் இருந்த பிறகும் இறந்து போனார்கள்.

ஆனால் நாங்கள் தேடிச்சென்ற திருச்சி சாந்தன் அங்கே இல்லை. காயமடைந்த விடுதலைப் புலிகள் அந்த வீட்டில்தான் தங்கியிருப்பதாக விக்கி சொல்லியிருந்தான்.

அப்படி யாரும் அங்கே இல்லை. எனவே அந்த வீட்டின் உரிமையாளரை விசாரித்து, அவர் மூலம் ஜகன்னாதன் என்ற தமிழ்த் தீவிரவாதி ஒருவர் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதைக் கேள்விப்பட்டு அவரைப் பிடித்தோம்.

தப்பித்தே தீரவேண்டும். ஒரு வழி சொல்லுங்கள்.’

சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் இது.

ra

எப்படியாவது தமிழகத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். ஆனால் வெளியே வரமுடியாதபடி சி.பி.ஐ. எல்லா இடங்களிலும் கண்கொத்திப் பாம்பாகக் காத்து நிற்கிறது.

தப்பித்தே தீரவேண்டும். ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் இது.

இதற்கு வந்த பதில்: திருச்சி சாந்தன் உதவுவார். காத்திருக்கவும். இந்த திருச்சி சாந்தன் என்பவர், நாம் முன்னர் பார்த்த சின்ன சாந்தன் (என்கிற சுதேந்திர ராஜா) அல்ல.

இவர் வேறு.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவைச் சேர்ந்த இவர், வெகு காலமாகத் தமிழகத்தில் புலிகள் இயக்கத்துக்காக உழைத்து வந்தவர்.

தி.மு.க தலைமையிலான தமிழக அரசு கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான காவல் துறை நடவடிக்கைகள் தீவிரமடைந்தபோது (பல புலிகள், புலி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுக்கொண்டிருந்த சமயம் அது) தலைமறைவானவர்.

murukan தப்பித்தே தீரவேண்டும்!.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –21) murukanஆயினும் அன்றைய தேதியில் தமிழகத்தில் இருந்தபடி புலித் தலைவர் பிரபாகரனுடன் நேரடி வயர்லெஸ் தொடர்பு வைத்துக்கொண்டிருந்த ஒரே நபர் அவர்தான்.

ஆனால், ஒரு வினோதம் சிவராசனுக்குத் திருச்சி சாந்தனை அதற்கு முன்னால் தெரியாது.

ஒருமுறை கூடப் பார்த்ததோ, பேசியதோ இல்லை. கேள்விப்பட்டதுகூட இல்லை.

இருவரும் விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்றாலும், ஒருவரையொருவர் அறிந்தவர்களில்லை.

ராஜிவ் கொலைச் சம்பவத்துக்குப் பிறகு சிவராசன் தமிழகத்திலிருந்து தப்பித்து இலங்கை செல்ல திருச்சி சாந்தன் மூலம் பொட்டு அம்மான் நடவடிக்கை எடுக்கிறார் என்கிற தகவலை அந்த சங்கேதச் செய்திக் குறிப்பிலிருந்து உடைத்துத் தெரிந்துகொண்டோம்.

எனவே எங்களுடைய உடனடி இலக்கு, திருச்சி சாந்தனைப் பிடிப்பதுதான்.

என்ன பிரச்னை என்றால், திருச்சி சாந்தனின் இருப்பிடம் சிவராசனுக்குத் தெரியாது. சிவராசனின் இருப்பிடம் யாருக்குமே தெரியாது.

இவர்கள் எப்போது, எங்கே சந்திப்பார்கள்? எங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் இருந்த ஒருவீட்டில் அந்தச் சந்திப்பு நடந்ததைப் பின்னால் தெரிந்துகொண்டோம்.

முன்னதாக, சிவராசன் கொடுங்கையூரில் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் விஜயன் என்பவரைக் கைதுசெய்து விசாரித்ததில் சிவராசனின் டைரி உள்ளிட்ட சில முக்கிய ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருந்தன.

விஜயன் உதவியுடன் அவரது வீட்டுச் சமையல் அறையிலேயே ஒரு குழிவெட்டி வயர்லெஸ் செட்டைப் புதைத்து, அதன்மூலமாகத்தான் அவர் இலங்கையைத் தொடர்புகொண்டிருக்கிறார் என்கிற விவரமும் தெரிந்திருந்தது.

அவை அனைத்தையும் கைப்பற்றி இருந்தோம். மிச்சமிருப்பது சிவராசன்தான்!

அவரைப் பிடிக்க நாங்கள் மாநிலமெங்கும் இரவு பகல் பாராமல் தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் எல்டாம்ஸ் ரோடில் வசித்து வந்த ஓர் இலங்கைத் தமிழர் வீட்டில் சிவராசன் சார்பில் சின்ன சாந்தனும் திருச்சி சாந்தன் சார்பில் டிக்சன் என்ற இன்னொரு விடுதலைப் புலியும் சந்தித்திருக்கிறார்கள்!

எப்படித் தப்பிப்பது என்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு எங்களுக்கு இத்தகவல் கிடைக்க, மேற்கொண்டு துருவியதில் கோடியக்கரை கடத்தல்காரர் சண்முகத்தைப் பிடித்தால் இவர்கள் தப்பும்போது பிடித்துவிட முடியும் என்று தோன்றியது.

மாநில போலீஸ் உதவியுடன் சண்முகத்தைக் கைது செய்ய நாங்கள் முயற்சி செய்தபோது, அவர் விஷயம் அறிந்து தமிழக காவல் துறையின் மூலம் சி.பி.ஐயிடம் சரணடைந்தார்.

முதலில் சற்றுத் தயங்கினாலும் பிறகு அவர் நிறையவே பேசினார்.

புலிகளுடனான தொடர்புகள். இலங்கையிலிருந்து வருகிற பெரும்பாலான விடுதலைப் புலிகளுக்கு அவரது வீடுதான் முதல் வரவேற்பரையாக இருக்கிற விஷயம்.

காட்டுப் பகுதியில் புலிகளுக்காகக் கடத்தப்படும் பெட்ரோல், டீசல், போன்ற பொருள்களைப் பதுக்கி வைத்து படகு வரும் வேளை பத்திரமாக அனுப்பிவைக்கிற அவரது உதவிகள்.

புலிகளுக்காகத் தனது நிலத்தில் அவர் வசதி மிக்க காட்டேஜெல்லாம் கட்டி வைத்திருந்தார்.

தவிரவும் தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதலைப் புலிகளுடனும் அவர் வயர்லெஸ் தொடர்பு வைத்திருந்தார்.

சண்முகத்தை அவரது வேதாரண்யம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பதுக்கி வைத்திருக்கும் பொருள்களை அடையாளம் காட்டச் சொன்னோம்.

sanmukamm தப்பித்தே தீரவேண்டும்!.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –21) sanmukammநிறையவே காட்டினார்.

குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் கேன்கள், புலிகளுக்குத் தேவையான பேட்டரிகள், பிற பொருள்கள். அனைத்திலும் முக்கியம், முருகன் இடையே இலங்கை திரும்புவதாகப் புறப்பட்டு, போகாமல் திரும்பவும் சென்னை திரும்பிய சமயம் அவரிடம் கொடுத்துவிட்டு வந்திருந்த சில பொருள்கள்.

ஏற்கெனவே முருகன் தனது வாக்குமூலத்தில் இது பற்றிச் சொல்லியிருந்ததால் சண்முகத்திடம் அதனைக் குறிப்பிட்டு, முருகன் கொடுத்துவிட்டுப் போன பைகளைக் கேட்டோம்.

vetharniyam தப்பித்தே தீரவேண்டும்!.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –21) vetharniyamஅதையும் புதைத்துவைத்திருந்தார்.

பைகள் மட்டுமல்லாமல் ஒரு சூட்கேஸும் கூட! அந்த ஜூன் 18ம் தேதி இரவு முழுவதும் வேதாரண்யம் காட்டுப்பகுதியில் சண்முகம் சுட்டிக்காட்டிய இடங்களில் எல்லாம் தோண்டத் தோண்ட என்னென்னவோ பொருள்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன.

வெடி பொருள்கள், பேட்டரிகள், பெட்ரோல், டீசல் கேன்கள், வயர்லெஸ் செட்டுகள் என்று பூமிக்குள்ளிருந்து வந்துகொண்டே இருந்தன.

இரவு சண்முகத்தை அவர் வீட்டிலேயே சாப்பிடுவதற்கு அழைத்துச் சென்றோம்.

ஏற்கெனவே நான் குறிப்பிட்டது மாதிரி, அது ஒரு வழக்கம். சாப்பிடவைத்து, அன்பாகப் பேசி, கைது நடவடிக்கையை அதிர்ச்சி தராமல் செய்வதன்மூலம் தகவல் பெறுவதில் தடங்கல்கள் இராது.

வேதாரணம் பயணியர் விடுதியில் சி.பி.ஐ. முகாமிட்டிருந்த இடத்துக்கு சண்முகத்தின் உறவினர் ஒருவர் வந்தார்.

சீதாராமன் என்ற பெயருடைய அந்த மனிதரும் கடத்தல் தொழில் செய்பவர்தாம்.

கொஞ்சநேரம் சண்முகமும் அவரும் தனியே பேசிக்கொண்டிருக்க, சீதாராமன் சண்முகத்தைக் கண்டபடி திட்டினார்.

செய்த காரியம், செய்துகொண்டிருக்கும் காரியம் குறித்த அவரது கண்டனமாக இருக்கக்கூடும்.

அவர்கள் தனியே பேசியதால் எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. முதல் முதலில் சண்முகம் அச்சத்தின் பிடியில் அகப்பட்டது அப்போதுதான்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தனது செயல்கள் போய்க்கொண்டிருப்பது குறித்த அச்சம். மாட்டிக்கொண்டாகிவிட்டது.

இனி என்ன செய்து மீள்வது? அப்போதுதான் அவர் தப்பிக்க முயற்சி செய்தார். கைகழுவச் செல்வது போல் விருந்தினர் விடுதியின் பின்புறம் சென்றவர் அப்படியே திரும்பிப் பாராமல் ஓடத் தொடங்கினார்.

இத்தனைக்கும் அவருடன் ஒரு கான்ஸ்டபிள் இருந்தார்.

ஓடிய நபரைத் துரத்திச் சென்று பிடிக்காமல், பதற்றத்தில்   அவர் உள்ளே ஓடிவந்து எங்களிடம் தகவல் சொல்ல, இடைப்பட்ட நேரத்தில் சண்முகம் அந்த அடர்ந்த புதருக்குள் காணாமல் போயிருந்தார்!

அதிகாரிகள் துரத்திக்கொண்டு போக, பழக்கமில்லாத பகுதியில் முன்னேறுவது மிகவும் சிரமமாக இருந்தது.

ஆனால், சண்முகத்துக்கு அது பழகிய இடம். அடர்ந்த இருளில் புதைத்து வைத்திருந்த பொருள்களையே அவர் அநாயாசமாக ஒரு விளக்கு வெளிச்சம்கூட இல்லாமல் அடையாளம் காட்டக்கூடியவராயிற்றே.

தப்பியோடுகிறபோது தனது வெள்ளை வேட்டி, சட்டையை அவிழ்த்து எறிந்துவிட்டு அவர் ஓடியிருந்தார்.

அது மட்டும் காவலர்களிடம் கிடைத்தது.

மறுநாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சண்முகத்தின் உடலைத்தான் கைப்பற்ற முடிந்தது.

ஓடும்போது நண்பர் ஒருவர் (மின்சார வாரியத்தில் வேலை பார்ப்பவர்) வீட்டிலிருந்து லைன்மேன்கள் பயன்படுத்தும் கனமான கயிறைக் கேட்டு அல்லது எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்.

தவிர, அவரது மகனது லுங்கி ஒன்றையும் வாங்கிக் கட்டிக்கொண்டு சென்றிருக்கிறார் என்பது பிறகு விசாரணையில் தெரியவந்தது.

வழக்கு, விசாரணை, குற்றச்சாட்டுகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மீது அவதூறுகள் என்று அந்த வாரம் முழுதும் அமளிதுமளிப்பட்டது.

அது தற்கொலையே அல்ல, சண்முகத்தைக் கொன்றுவிட்டார்கள் என்றுகூடப் பேசினார்கள், பத்திரிகைகளில் எழுதினார்கள்!

ஆனால் நடந்தது இதுதான்!!

பிராந்தியத்தையே நிலை குலையவைத்த

சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து..

18 பேரின் உயிரை வாங்கியது!!

பிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –20)

ஹரி பாபு அவர் மாலை போடுவதற்காக ஃபோகஸ் செய்ய, தணு சடாரென்று நெருங்கியதுமே குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார்.

இதனை எதிர்பார்க்காத ஹரி பாபு, படம் எடுக்க முடியாமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தில் மேலும் முன்னால் வந்து குனிந்து படமெடுக்கப் பார்க்க, அந்தக் கணமே குண்டு வெடித்தது.

பிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ். ராஜிவ் காந்தி உள்பட பதினெட்டு பேரின் உயிரை வாங்கிய குண்டு. என்னவென்று புரியாமல் கூட்டம் பதறி ஓடத் தொடங்கியது.

p30a பிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –20) p30a

மேடையில் இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, மற்றும் அருகிருந்த ஜி.கே. மூப்பனார் போன்றவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவரத் தொடங்கினார்கள்.

என்ன நடக்கிறது என்பதே தெரியாத புகை மண்டலம். கால் வைக்கும் இடங்களில் எல்லாம் சதைத் துண்டுகள், ரத்தம், அதிபயங்கர ஓலம், மரண ஓலம். நளினியும் சுபாவும் அப்போது ஓடிக்கொண்டிருந்தார்கள்.

இந்திரா காந்தி சிலை வரை ஓடி, மூச்சு வாங்கி அவர்கள் நிற்க, சொன்னபடி பத்து நிமிடங்களில் சிவராசன் தலைதெரிக்க ஓடிவருவது தெரிந்தது.

அருகே வந்தவர், ‘ராஜிவும் தணுவும் இறந்துவிட்டார்கள். துரதிருஷ்டவசமாக ஹரி பாபுவும் இறந்துவிட்டார்’ என்று சொன்னார்.

அவர் தன்னிடம் ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி வைத்திருந்த பிஸ்டலை நளினியிடம் கொடுத்து, சுபாவிடம் பிறகு தந்துவிடும்படி சொன்னார்.

மூவரும் வேகமாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து பேருந்து நிலையத்துக்கு வந்தார்கள்.

சென்னை செல்லும் பஸ் ஒன்று நின்றிருந்தது. ஆனால் அது கிளம்பாது என்று யாரோ சொன்னார்கள்.

என்ன செய்வதென்று புரியாமல் மேலும் வேகவேகமாக நடந்தார்கள். வழியில் ஒரு வீட்டருகே நின்று, அங்கே வாசலில் இருந்த பெண்மணியிடம் கேட்டுத் தண்ணீர் வாங்கிக் குடித்தார்கள்.

மெயின் ரோடுக்கு வந்து ஓடத் தொடங்கினார்கள். சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரம். ஏதாவது ஒரு வண்டி கிடைத்தால் நல்லது.

யோசித்தபடி அவர்கள் ஓட, ஓரிடத்தில் இருளில் காத்திருந்த இன்னொரு மனிதர் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

நால்வருமாக ஒரு ஆட்டோவை நிறுத்தினார்கள். ‘சென்னைக்குப் போகவேண்டும். பஸ் கிடைக்கவில்லை.’ ‘இது திருவள்ளூர் வண்டி சார்.

மெட்ராஸ் வரைக்கும் போறது கஷ்டம். எவ்ளோ தூரம் முடியுதோ, போகலாம்’ என்று சொல்லி ஏற்றிக்கொண்டான்.

சிவராசன், சுபா, நளினி மூவரும் பின்னால் ஏறிக்கொள்ள, அந்தப் புதிய மனிதர் டிரைவருக்கு அருகே ஒட்டிக்கொண்டார்.

ஆட்டோ புறப்பட்டது. யாரும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தார்கள்.

பிரச்னையேதும் இல்லாமல் ஆட்டோ சென்னை நகர எல்லையை அடைந்தது. கத்திப்பாரா சந்திப்பு வந்தபோது, ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, அந்தப் புதிய மனிதர் மட்டும் இறங்கிக்கொண்டார்.

மற்ற மூவருடன் ஆட்டோ மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

தேனாம்பேட்டை சிக்னல் அருகே அவர்கள் இறங்கிக்கொண்டு, டிரைவருக்குப் பணம் கொடுத்தார்கள்.

இன்னொரு ஆட்டோ பிடித்து பாரீஸ் கார்னர் சென்று, அங்கே வேறொரு ஆட்டோ பிடித்து கொடுங்கையூர் போய்ச் சேர்ந்தார்கள்.

நளினி அதுநாள் வரை சந்தித்தே இராத அந்தப் புதிய மனிதர் ஸ்ரீபெரும்புதூர் சம்பவ இடத்தில் இருந்த ஆறாவது மனிதர், விடுதலைப் புலியின் பெயர், சின்ன சாந்தன்!

வழக்கெல்லாம் முடிந்து நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மிகத் தற்செயலாக இதனைக் கண்டுபிடித்தேன்.

ஹரி பாபு எடுத்திருந்த பத்து புகைப்படங்களுள் ஒன்றில் ராஜிவுக்கு நெருக்கமாக நின்று மாலை அணிவிக்கும் ஒரு அதிமுக கரை வேட்டித்துண்டு மனிதரின் படமும் இருந்தது.

அவர் யாரென்று எங்களால் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடிந்தபோது, அந்தக் கண்டுபிடிப்பு அவசியமற்றதாகிவிட்டது.

சின்ன சாந்தனை நாங்கள் ஏற்கெனவே கைது செய்து, விசாரித்து, அவர் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்!

sivarasn பிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –20) sivarasnஒற்றைக்கண் சிவராசன். ஹரி பாபு எடுத்த போட்டோக்களில் இருந்து அவரை நாங்கள் அடையாளம் கண்டதும் சிவராசன் தான் முந்தைய பத்மநாபா கொலை வழக்கிலும் தேடப்பட்டுக்கொண்டிருந்த குற்றவாளி என்பது தெரிந்ததும் சி.பி.ஐ. ஒரு காரியம் செய்தது.

எங்களிடம் இருந்த சுபா மற்றும் சிவராசனின் புகைப்படத்தை முடிந்தவரை பெரிதாக அச்சிட்டு, இந்தியாவெங்கும் போஸ்டர்களாக ஒட்டினோம்.

தேடப்படும் குற்றவாளி. கண்டுபிடித்துக் கொடுப்போருக்குப் பரிசு. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் என்று அனைத்து ஊடக சாத்தியங்களையும் பயன்படுத்தி, சிவராசனைப் பற்றிய தகவல்களுக்காக சி.பி.ஐ. காத்திருப்பதை அறிவித்துக்கொண்டே இருந்தோம்.

யாருக்கு என்ன தகவல் கிடைத்தாலும் சொல்லலாம்.

தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம்கூட இல்லை. மல்லிகையில் தகவல் பெறுவதற்கென்றே ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது.

சில பிரத்தியேக தொலைபேசி எண்கள் அதற்கென்றே தரப்பட்டன. யாரும் போன் செய்யலாம். தமக்குத் தெரிந்த தகவலைச் சொல்லலாம்.

சில உருப்படியான தகவல்கள் வரத்தான் செய்தன என்றாலும் பலபேர் அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன் என்று யார் யாரையோ பார்த்து சிவராசன் என்று கற்பனை செய்துகொண்டு உடனே போன் செய்துவிடுவார்கள்.

நாங்களும் சம்பந்தப்பட்ட நபர் குறிப்பிட்ட இடங்களுக்கு ஓட்டமாய் ஓடுவோம். ஏமாற்றமுடன் திரும்ப நேர்ந்தாலும் பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பும் அவர்கள் காட்டிய ஆர்வமும் முக்கியமானவை.

இதனிடையே தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் வயர்லெஸ் சங்கேதத் தகவல்களை இடைமறித்துக் கேட்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

புரிந்து கொள்ளச் சிரமமான தகவல்களாகத்தான் அவை பெரும்பாலும் இருந்தன என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, பரிச்சயம் ஏற்பட்டு (ஐ.பி. மூலம்) ஓரளவு விடுதலைப் புலிகளின் சங்கேதங்களை உடைக்கக் கற்றுக்கொண்டு விட்டோம்.

தமிழகமெங்கும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தோம்.

கிட்டத்தட்ட மாநிலம் முழுதும் சி.பி.ஐ குழுவினரும் மாநில காவல் துறையினரும் சிவராசனுக்காகப் பதுங்கிக் காத்திருந்தனர்.

படுகொலைச் சம்பவத்துக்குப் பிறகு திருப்பதி பயணம் வரை அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள்.

அதன்பின் முருகனும் நளினியும் தனியே போக, சிவராசனும் சுபாவும் தனியே போய்விட்டார்கள்.

எப்படியாவது தமிழகத்திலிருந்து தப்பித்து இலங்கை செல்வதே அவர்களது இலக்கு என்பது எங்களுக்குத் தெரியும்.

எனவே தமிழக, கடலோரக் காவலை வெகுவாக பலப்படுத்தினோம்.

புலிகள் பொதுவாகப் படகு ஏறக்கூடிய இடங்கள் என்று சொல்லப்பட்ட அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும் ஆள்கள் போடப்பட்டிருந்தார்கள்.

இதனால் சிவராசனும் சுபாவும் வெளியே வருவதே சிரமம் என்னும் நிலை உண்டாயிற்று.

ஆனால் தொடர்ந்து அவர்கள் வயர்லெஸ் மூலம் பொட்டு அம்மானுடன் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். அத்தகைய ஒரு குறிப்பிட்ட வயர்லெஸ் தொடர்பை ஐ.பி. இடைமறித்துக் கேட்டதில் ஒரு தகவல் கிடைத்தது.

குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு!

அந்தக் கணமே குண்டு வெடித்தது!!

குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு!! : அந்தக் கணமே குண்டு வெடித்தது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –19)

ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, வாங்கி வைத்துக்கொண்டார். நளினியும் சுபாவும் மல்லிப்பூ வாங்கிக்கொண்டார்கள்.

முதலில் சாப்பிட்டு விடலாம் என்று சொல்லி, சிவராசன் அவர்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அது ஒரு முனியாண்டி விலாஸ்.

ஏனோ அந்த ஹோட்டல் வேண்டாம் என்று அனைவருமே நினைக்க, அக்கம்பக்கத்தில் விசாரித்து இன்னொரு முனியாண்டி விலாஸ் அதே ஊரில் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கே சென்றார்கள். திருப்தியாக பிரியாணி சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடித்ததும் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த மைதானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காந்தி சிலையருகே வந்தபோது சற்று நேரம் நின்றார்கள்.

யார் யார் என்ன செய்யவேண்டும் என்று இறுதியாக ஒருமுறை பேசிக்கொண்டார்கள்.

p30 குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு!! : அந்தக் கணமே குண்டு வெடித்தது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –19) p30

தணுவின் சல்வார் கம்மீஸ் ஆடைக்குள் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது. இரண்டு விசைகள் கொண்ட வெடிகுண்டு. மாலை போடத் தயாராகும்போது அவர் முதல் விசையை அழுத்திவிட வேண்டும். குண்டு வெடிக்கத் தயாராகிவிடும்.

அது தயாராகிவிட்டது தெரிந்ததும் தாமதிக்காமல் குனிந்து, அடுத்த விசையை அழுத்திவிட வேண்டும். தணு தன் வயிற்றைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். ‘நான் தான் பொருத்திவிட்டேன்’ என்று சுபா சொன்னார்.

அனைவருமே பதற்றமுடன் இருந்தார்கள். ஹரி பாபு, தணு ராஜிவுக்கு மாலை இடுவதையும் குண்டு வெடிப்பதையும் போட்டோ எடுக்க வேண்டும்.

தணு, ராஜிவை நெருங்கும் கணத்துக்கு முன்வரை அவரையும் சுபாவையும் அடைகாக்க வேண்டிய பொறுப்பு நளினியுடையது. அவ்வண்ணமே, குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் சுபாவை பத்திரமாகக் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தி வெளியே அழைத்து வரவேண்டியதும் நளினியின் பொறுப்பு.

எப்படியும் களேபரமாகும். அனைவரும் சிதறி ஓடுவார்கள். அந்த இடைவெளியில் தப்பித்து விட வேண்டும்.

இந்திரா காந்தி சிலை அருகே பத்து நிமிடங்கள் நளினியும் சுபாவும் காத்திருக்க வேண்டும். சிவராசன் அங்கே வந்துவிடுவார்.

ஹரி பாபுவும் உடன் வந்துவிடுவார். பிறகு நால்வரும் தப்பித்துவிடலாம். ஒருவேளை சிவராசன் வரத் தாமதமாகிவிட்டால், மேற்கொண்டு காத்திருக்காமல் மற்றவர்கள் ஒன்றாகத் தப்பிச்சென்று விட வேண்டும் என்பது திட்டம்.

அந்த இடத்தில், அந்தச் சதித்திட்டத்தில் தாங்கள் ஐந்து பேர் மட்டுமே பங்குகொண்டிருப்பதாக நளினி நினைத்தார்.

ஆனால் ஆறாவதாகவும் ஒரு நபர் அங்கே இருந்த விஷயம் அவருக்கு மட்டுமல்ல. இந்த வழக்கின் புலன் விசாரணை முழுவதுமாக முடிகிறவரை சி.பி.ஐக்குக் கூடத் தெரியாது!

இந்திரா காந்தி சிலையருகே நின்று பேசிவிட்டு அனைவரும் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஹரி பாபுவும் சிவராசனும் தனித்தனியே மேடையை நோக்கிப் போக, சுபா, தணு, நளினி மூவரும் பெண்கள் பகுதியில் சென்று அமர்ந்துகொண்டார்கள்.

மேடையில் சங்கர் கணேஷ் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சிவராசன் பெண்கள் பகுதிக்கு வந்து தணுவை மட்டும் அழைத்து அவர் கையில் அந்த பிரவுன் கவரைப் பிரித்து, சந்தன மாலையை எடுத்துக் கொடுத்தார். போய்விட்டார்.

மீண்டும் திரும்பி வந்து, தணுவை மட்டும் அழைத்துக்கொண்டு மேடையின் பின்புறமாகச் சென்றார்.

அங்கே ஹரி பாபுவும் நின்றுகொண்டிருந்தார். ராஜிவ் காந்தி விழா மேடைக்கு வருகிற வழியெங்கும் கூட்டம் இருந்தது.

அவருக்காக விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளப் பாதையின் இருபுறமும் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருந்தது.

அந்தக் கூட்டத்தில் தணுவைச் சொருக சிவராசன் முயற்சி செய்தார்.

ஏனெனில், நேரம் மிகவும் ஆகிவிட்டபடியால் மேடையில் அனைவருக்கும் மாலை போட சந்தர்ப்பம் கிடைப்பது சிரமம் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது.

சொல்லி வைத்தமாதிரி லதா கண்ணன், அவரது பெண் கோகிலவாணி (இவள் ராஜிவை வாழ்த்திக் கவிதை பாடக் காத்திருந்தவள்) ஆகியோரும் மகளிர் வரிசையில் நளினிக்குப் பின்னால் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து ராஜிவ் வரும் பாதையை நோக்கிச் சென்றார்கள்.

தணு சில நிமிடங்களில் அந்தச் சிறுமி கோகில வாணியை நட்பாக்கிக்கொண்டு அவளுடன் சகஜமாகப் பேசத் தொடங்கியிருந்தார். ராஜிவ் வரும் நேரம் நெருங்கிவிட்டதென்றும் மாலையிடப் பெயர் கொடுத்திருப்பவர்கள் சிவப்புக் கம்பளப் பாதை ஓரம் வரிசையாக நிற்கும்படியும் மைக்கில் அறிவித்தார்கள்.

கூட்டம் இன்னும் முண்டியடித்தது. காவலர்கள் நிறையப் பேர் இருந்தாலும் யாரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, ஒழுங்கு செய்யவோ விரும்பாத மாதிரி, அவர்களும் பொதுவில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

வாழப்பாடி ராமமூர்த்தி திடீரென்று மேடை ஏறினார். ராஜிவ் வருகிறார் என்கிற அவரது அறிவிப்புக்குக் கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது.

rajiv_sriperambadu001_3-20060627-copy1 குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு!! : அந்தக் கணமே குண்டு வெடித்தது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –19) rajiv sriperambadu001 3 20060627 copy1

இசைக் குழுவினர் நகர ஆரம்பிக்க, ஹரி பாபு தன்னுடைய கேமராவைத் தயார் செய்துகொண்டு தணு நின்றிருந்த இடத்துக்கு ஃபோகஸ் செய்துகொண்டிருந்தார்.

மாலை போடும்போது ஒரு ஸ்னாப். கணப்பொழுதில் பின்வாங்கி, குண்டு வெடித்ததும் இன்னொரு ஸ்னாப். அவ்வளவுதான்.

இங்கே பெண்கள் வரிசையில் அமர்ந்திருந்த சுபாவும் நளினியும் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தார்கள். ராஜிவின் கார் வந்து நிற்பதைப் பார்த்ததுமே அவர்கள் எழுந்து கொண்டார்கள்.

ராஜிவ் சிவப்புக் கம்பளத்தின்மீது நடந்து வரும்போது நளினி சுபாவின் கையை அழுத்திப் பிடித்துக்கொண்டார்.

‘வா’ என்று சொல்லிவிட்டுக் கூட்டத்திலிருந்து வெளியே வந்து விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார்கள்.

அத்தனை பேரின் கவனமும் ராஜிவின் மீதே இருக்க, அவர் அந்த இரவுப் பொழுதிலும் முகத்தில் களைப்பேதும் இன்றி, மாறாத புன்னகையுடன் கூட்டத்துக்கு வணக்கம் சொல்வதும், கையாட்டுவதும் மாலைகளை வாங்கிக்கொள்வதுமாக முன்னேறி வந்துகொண்டிருந்தார்.

காங்கிரஸ் பிரமுகர் லஷ்மி ஆல்பர்ட் வழியில் நின்று ராஜிவுக்கு வணக்கம் சொல்ல, அவரை அடையாளம் கண்டு ஒருவரி நலம் விசாரித்தார்.

அதைச் சற்றுத் தொலைவில் நின்றிருந்த மரகதம் சந்திரசேகர் கவனித்துவிட்டார். அவருக்கு ஏனோ அது பிடிக்கவில்லை.

முகம் இருண்டுவிட்டது. கூட்டத்தோடு கலந்திருந்த டரியல் பீட்டர்ஸ் சட்டென்று முன்னால் வந்து மரகதம் சந்திரசேகரின் கையைப் பிடித்து அவரை மேடைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினார்.

ராஜிவ் முன்னேறி வரவர, கூட்டம் ஆரவாரம் செய்துகொண்டே இருந்தது.

அவர் சிறுமி கோகிலவாணியின் அருகே வந்தார். குனிந்து கன்னத்தைத் தட்டினார். சிறுமி கவிதை எழுதியிருப்பதை அவளது தாய் ராஜிவிடம் சொன்னார்.

தணு தயாராக இருந்தார்.

ஆனால் மிகவும் பதற்றமாக இருந்தார். கூட்டம் மிகவும் மோதி, முண்டியடிக்க, எந்தச் சிக்கலும் இல்லாமல் காரியம் முடியவேண்டுமே என்கிற பதற்றம். ஒரு முடிவுக்கு வந்தவராக, சட்டென்று முன்வந்து ராஜிவை நெருங்கினார்.

ஹரி பாபு அவர் மாலை போடுவதற்காக ஃபோகஸ் செய்ய, தணு சடாரென்று நெருங்கியதுமே குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார்.

இதனை எதிர்பார்க்காத ஹரி பாபு, படம் எடுக்க முடியாமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தில் மேலும் முன்னால் வந்து குனிந்து படமெடுக்கப் பார்க்க, அந்தக் கணமே குண்டு வெடித்தது.

தொடரும்…………..