இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்!

 

இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்!

உண்ணாவிரதம் இருக்கும்
கைதிகளை மறந்து வாழ ஒன்று
சந்திரிகா அம்மையாருடன் குடித்து மகிழ ஒன்று

இரண்டு மனம் வேண்டும்
திருமலை காளி அம்மனிடம் கேட்பேன்

இந்திய தூதருடன் வாரா வாரம் குடித்து மகிழ ஒன்று
இந்த பாழாய் போன தமிழ் சனங்களை மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்பேன்.

குறிப்பு-
“ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்
மதுக் கிண்ணத்தில் நீந்துகிறேன்.
ஏன் என் ஏன் ஏன்” என்றே முதலில் பாட நினைத்தார். ஆனால் அப்புறம் ஏனொ பாட்டை மாற்றி விட்டார்.