100,000 டொலர் சட்டவிரோத பணத்துடன் பெண் ஒருவர் கைது

சட்ட விரோதமாக வைத்திருந்த ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களுடன் (USD 100,000) கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (13) காலை ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-126 எனும்  சென்னையிலிருந்து வந்த விமானத்தில் வந்த குறித்த பெண் (36) எவ்வித விசாரணைகளும் இடம்பெறாத ‘கிறீன் சனல்’ நுழைவாயில் வழியாக செல்ல முற்பட்ட வேளையிலேயே சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
தனது கைப் பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த பணத்தை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
தனி நபர் ஒருவரால் 10,000 டொலர் பணத்துடனேயே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News