மஹிந்தானந்த, வெல்கம நீக்கம்; சந்திரிகாவுக்கு அத்தனகல்ல

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து மஹிந்தானந்த அலுத்கமகே, குமார வெல்கம எம்.பிக்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் சு.க.வின் நாவலபிட்டி தொகுதி அமைப்பாளராக இருந்து மஹிந்தானந்த அலுத்கமகேயின் இடத்திற்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் எச்.ஏ. ரணசிங்கவும் மதுகம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட குமார் வெல்கமவின் இடத்திற்கு புதிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சுமித்ரா பிரியாங்கனி அபேவீரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவிகளை மீள ஒழுங்கமைக்கும் நடவடிக்கை நேற்று (12) இடம்பெற்றதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக சுதந்திர கட்சியின் அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளமையாகும்.
இதன்போது, கட்சியின் தொகுதி அமைப்பாளர்களில் பெரும்பாலானோருக்கு அவர்கள் வகித்த அமைப்பாளர் பதவிகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.