வியட்நாம் வெள்ளம்: 37 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 37 பேர் உயிரிழந்ததோடு மேலும் 40 பேரைக் காணவில்லை.

வெப்பமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, வியட்நாமின் வடக்கு, மத்தியப் பகுதிகளில் கனத்த மழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டது.

பெருமழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. அதில் மேலும் 21 பேர் காயமடைந்தனர். வெள்ளத்தைத் தொடர்ந்து, அணைகளிலிருந்தும் தண்ணீரைத் திறந்து விட நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

சுமார் 200 வீடுகள் இடிந்து விழுந்தன.

17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், மேலும் 18 ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கியோ, சேதமுற்றோ காணப்படுவதாய் வியட்நாமிய அதிகாரிகள் கூறினர்.

About Thinappuyal News