டயலொக் அனுசரணையில் ஆசிய 7 பேர் ரக்பி இறுதி போட்டிகள் கொழும்பில்

டயலொக் அனுசரணையில் இடம்பெறும் Asia Rughy7’s போட்டிகளின் இறுதிப் போட்டிகள் 2017 ஒக்டோபர் மாதம் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் கொழும்பு குதிரைப்பந்தைய திடலில் இடம்பெறவிருகின்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ரக்பி அணியினர் ஏனைய ஆசிய அணிகளுடனும் நேருக்கு நேர் மோதி தங்களுடைய நிமையினை வெளிக்காட்டுவதற்காக இந்த போட்டிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

Asia Rughy Servens தொடர்பின் இறுதிப் போட்டி இலங்கை டயலொக் தொலைக்காட்சி Dialog Now இல் அலைவரிசை இலக்கம் 1 இலும் The Papare com இலும் மற்றும் Dialog my/Tv mobile app இலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசமாக வழங்கப்படுகின்றது. ஒக்டோபர் மாதம் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் இடம்பெறும் போட்டிகள் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்த போட்டிகள் மூன்று பிரிவுகளாக இடம்பெற்றன. முதல் சுற்று போட்டிகள் ஹாங்கொங்கிலும் இரண்டாம் சுற்று போட்டிகள் தென் கொரியாவிலும் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் இலங்கை அணியினர் தங்களின் மகுடத்தினை சூட்டிக்கொண்டார்கள். மேலும் இந்த வருடமும் தங்களுக்கான மகுடத்தினை சூட்டிக்கொள்ள மேலும் முயற்சித்து வருகின்றார்கள். ஆசிய ரக்பி போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல் மற்றும் இரண்டாம் சுற்றுக்களில் the plate எனும் பட்டத்தினை பெற்றுக்கொண்டார்கள்.

About Thinappuyal News