அமைச்ரவையில் பெண்கள் போல் இருந்த காலம் தற்போது இல்லை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல யாப்பா!!

 

அமைச்ரவையில் பெண்கள் போல் இருந்த காலம் தற்போது இல்லை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல யாப்பா!!

அமைச்சரவையில் ஒரு தீர்மானம் வருகுது என்றால் அது தொடர்பாக நன்மையா  தீமையா என நன்றாக ஆராய வேண்டும் அது சண்டை என்று சொல்ல முடியாது பெண்கள் போல இருந்தால் உண்மைகள் நன்மை தீமை வெளியில் வராது என உயர் கல்வி  மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல யாப்பா தெரிவித்துள்ளார்

இன்று வெள்ளி கிழமை (13)மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளா அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் .

எனது அமைச்சின் சில வேலைத் திட்டங்கள் மட்டக்களப்பில் மேற்கொள்ள இருப்பதனால்  இங்கு வருகை தந்துள்ளேன் அந்த சமயத்தில் மட்டக்களப்பு மாவட்ட  ஐக்கிய  தேசிய கட்சியின் அலுவலகத்தையும் பார்வையிட்டுள்ளேன்

இந்த மாவடத்தில் எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக பாரிய வேலைப்பாடுகளும் எமக்குள்ளது அது போன்று பல அரசியல் கட்சிகளுடனும் போட்டி  போடும் நிலை இருக்கின்றதை உணரமுடின்கின்றது.

அகவே போட்டியியிடும் கட்சிகளுடன் போட்டி போட்டு வெற்றியோ தோல்வியோ தற்போது உள்ள அரசாங்கத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என நினைக்கின்றேன்

கேள்வி கடந்த மாதம் நடந்த அமைச்சரவை தீர்மானத்தின் போது  உங்களுக்கும் தயாசிறி ஜெயசேகர வுக்கும் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக கூறமுடியுமா?

பதில் .அது முரண்பாடு இல்லை  தற்போது அமைச்சரவையில் யாரும் பயமில்லாமல் பேச முடியும் ஒரு காலம் இருந்தது கடந்த கால ஆட்சியில் அமைச்சரவியில் ஒருவர் பேசுவார் மற்றவர்கள்  எல்லோருமே  ஓம் சேர் என்று கூறி தலையை கிழே தொங்க  விடுவார்கள்

தற்போது அப்படி இல்லை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அரசாங்கத்தில் எமது தலைவரும் இருக்கின்றார் அமைச்சரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவருபோது நன்மை தீமை இருக்கிறதா என்று ஆராய வேண்டிய கடமை யுள்ளது இதை தப்பாக புரிந்து கொண்டுள்ளறாக்கள்

கேள்வி இல்லை நீங்கள் சண்டை பிடித்ததாக தகவல் வெளி வந்தது

பதில் இல்லை அப்படி சண்டை இல்லை அனாலும்  அமைச்சரவையில் சண்டை பிடிக்க வேண்டும் பிடித்தால்தான் உண்மைகளை பேச முடியும் அப்போதுதான் கதைப்பார்கள இல்லா விட்டால் பெண்கள் போல் வாயை மூடிக்கொண்டு இருந்தால் அமைசரவையில் நடப்பவை வெளியில் வராது ஆகவே சண்டை பிடிக்க வேண்டும்

கேள்வி மட்டக்களப்பில் யார் உங்களது இணைப்பாளர்

பதில் அது சம்மந்தமாக நான் எமது தலைமைக்கு அறிவித்துள்ளேன் மிக விரைவில் இவர்களுக்கான நியமனங்கள்  வழங்கபப்டும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்