முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.சிங்களபேரினவாதத்துடன் இரண்டற கலந்தவர் என்பதை அடிக்கடி நிருபித்து வருகிறார்-சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே சூரத்தனம்!

142

சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்’ என்று உணர்ச்சி மிகுந்த, உறுதிமிக்கக் குரலில் கூறினார், இலங்கை வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.

mahinda-vikki011

நாங்கள் பேசும் பேச்சுகளும் உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் அளிக்கும் பதில்களும் எம்மை மட்டும் அல்ல, எமது வடமாகாண சபையையும் பாதிக்கக்கூடும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறக்கக் கூடாது.

அதாவது, உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுகளை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி, எமது வடமாகாண சபையைக் கலைக்கவும் எமது மத்திய அரசாங்கம் தயங்காது.

ஒன்றரை லட்சம் படை வீரர்கள் முகாம் இட்டிருக்கும் இடத்தில் அவர்களை பாதிக்கும் கருத்துகளை நாம் எடுத்து இயம்பும் போது மிக்க கவனம் அவசியம்.

அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வராதீர்கள்.

சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம்.

இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்’ என்று உணர்ச்சி மிகுந்த, உறுதிமிக்கக் குரலில் கூறினார், இலங்கை வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்) நிறுவனர்களில் ஒருவரான கே.ஜி.கண்ணபிரான் நினைவுச் சொற்பொழிவு கடந்த 9-ம் தேதி சென்னை தி.நகர் வித்யோதயா பள்ளி அரங்கில் நடைபெற்றது.

சிறப்பு சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டிருந்த விக்னேஸ்வரன், ‘பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாத்தல்’ என்ற பொருளில் பேசினார்.

அவரை அறிமுகம் செய்துவைத்துப் பேசிய பி.யூ.சி.எல் மாநிலத் தலைவரான பேராசிரியை சரஸ்வதி, ‘வடமாகாண முதல்வராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டதும் நம்பிக்கையோடு இருந்தோம்.

ஆனால், அங்கு பிரச்சினைகள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. மாறாகப் பிரச்சினை அதிகரிக்கவே செய்துள்ளது. இதற்கான விளக்கங்களை எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரஹ குரு சாட்சாத் பரப்ரம்மாஹ் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ…’ என்று பேச்சைத் தொடங்கினார் விக்னேஸ்வரன்.

ஆங்கில உரையை வாசித்து முடிக்க சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது.

தொடர்ச்சியாக தமிழில் பேசத் தொடங்கியதும், அவரது குரல் சற்று உயர்ந்து ஒலித்தது. கருத்துகளில் நிதானமும் முதிர்ச்சியும் வெளிப்பட்டன.

‘எல்லா விதத்திலும் எம்மை இயங்கவிடாது தடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

அதிகாரம் இல்லாத வடமாகாண சபைக்கு ஏன் நீங்கள் தெரிவானீர்கள் என்று கேட்பீர்கள்.

முன்னர் மாகாண சபைத் தேர்தலை நாங்கள் பகிஷ்கரித்ததால், தமிழ் பேசும் பிரதேசமான கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அளவில் சிங்கள ஊடுருவல்கள் நடந்தன.

நாம் சுதந்திரம் பெறுமுன் 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்த கிழக்கு மாகாண சிங்கள மக்களின் விகிதாசாரம், 30 சதவிகிதத்தைத் தாண்டியது.

இதே நிலை வடமாகாணத்தைப் பாதிக்கக் கூடாது என்பதாலேயே தேர்தலில் போட்டியிட்டோம். அது நன்மை பயத்துள்ளது.

மக்களின் மனோநிலை இந்தத் தேர்தல் மூலமாக உலகத்துக்குத் தெரியவந்தது. இராணுவத்தின் ஆட்டம் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் உள்ளது.

அப்படி இருந்தும் சிங்கள மக்களைத் தெற்கில் இருந்து கொண்டு வந்து வடமாகாணத்தில் குடியேற்ற அரசாங்கம் சகல நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.

எனினும் எமது சொற்ப அதிகாரங்களை பயன்படுத்தி அவர்களின் சிங்கள மயமாக்கலுக்கு முட்டுக்கட்டைகளை இட்டு வருகிறோம்.

உங்கள் உணர்ச்சிகளை நாம் புரியாதவர்கள் அல்ல. ஆனால் எமக்குத் தற்போது வேண்டியது உணர்ச்சிகள் அல்ல. உதவிகள் கூட அல்ல. உரிய சட்ட மாற்றமே. ஒற்றை ஆட்சியில் இருந்து மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

எமது தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனைக் கோருவதற்கும் கொண்டு வருவதற்கும் இந்திய அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை உள்ளது’ என்றார் விக்னேஸ்வரன்.

முதலமைச்சரான பிறகு, அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் இதுதான்.

நிகழ்ச்சி குறித்து பேராசிரியை சரஸ்வதி கூறியதாவது,

தேர்தலில் பங்கேற்காமல் போராட்டம் பாதிக்கப்படும் என்பது போன்ற விமர்சனங்களுக்கு விக்னேஸ்வரன் சிறப்பாக பதில் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்றார்.

SHARE