பந்தயத்தில் கார்த்திக்கிடம் தோற்றுப் போன இயக்குனர் கே.வி.ஆனந்த்

90

தனுஷ், அமிரியா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் ‘அனேகன்’. ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ படங்களை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படம் இது.

ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. விழாவில் அனேகன் படத்தில் நடிக்க வந்தது குறித்து கார்த்திக் பேசினார்.

அதில், “எனது தயாரிப்பில், எனது இயக்கத்தில் ஒரு படம் செய்யணும்னு ஆசை.. அதுக்காக ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு கதை எழுதிக்கிட்டிருந்தேன். அப்போதான் ஏஜிஎஸ் ஆபீஸ்லேர்ந்து எனக்கு போன் வந்துச்சு. கே.வி.ஆனந்த் படத்துல நடிக்கணும்னு சொன்னாங்க.

டைரக்டர் கதை சொல்ல வந்தாரு. உக்காந்தவுடனேயே ‘நீங்க இந்தப் படத்துல நடிக்க மாட்டீங்க.. ஆயிரம் ரூபா பந்தயம்’ என்றார் ஆனந்த். எனக்கு திக்குன்னு ஆயிருச்சு.. ‘அப்புறம் எதுக்கு இதெல்லாம்’ண்ணேன்..? ‘நீங்க கூப்பிட்டுட்டீங்க. கதையைச் சொல்ல வந்திருக்கேன்.

கதையையும் உங்க கேரக்டரையும் சொல்றேன். ஆனா நீங்க நடிக்க ஒத்துக்க மாட்டீங்க’ன்னு ஆனந்த் திரும்பவும் உறுதியா சொன்னார். ‘மொதல்ல கதையைச் சொல்லுங்க.. அதை அப்புறம் பார்க்கலாம்’ண்ணேன். கதையைச் சொன்னார்.. நான் ஒண்ணும் சொல்லலை.. ‘ஓகே’ன்னுட்டேன்.

அவருக்கே ஆச்சரியம்.. எனக்கும்தான். ஆனால் கதையும், இதுல என்னோட கேரக்டரும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதுனால ஒத்துக்கிட்டேன். ஆனந்த்துக்குத்தான் ஆயிரம் ரூபா லாஸ்..” என்றார் கார்த்திக்.

SHARE