நயன்தாரா மூன்றாவது முறையாக மலையாள ஸ்டாருடன் ஜோடி சேருகிறார்.

85

 

இப்போதெல்லாம் நடிகைகளின் முன்னணி அந்தஸ்து ஒரு ரவுண்டுக்கு மேல் தாங்குவதில்லை. ஆனால் அதையும் உடைத்தெரிந்தவர் நயன்தாரா.

முதல் ரவுண்டை காட்டிலும் இரண்டாவது ரவுண்ட்டில் தான் படு பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இது நம்ம ஆளு, தனி ஒருவன், மாஸ், நண்பேன்டா, நானும் ரௌடிதான் போன்ற படங்களில் பிசியாக உள்ளார். இதுதவிர தனது தாய்மொழியான மலையாளத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இயக்குனர் சித்திக் சொன்ன பாஸ்கர் தி ராஸ்கல் என்ற கதையை கேட்டு ரொம்பவே இம்ப்ரஸான நயன்தாரா உடனே கால்ஷிட் கொடுத்துவிட்டாராம். படத்தில் அவர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். நயன்தாரா அறிமுகமான காலகட்டத்தில் மம்முட்டியுடன் ‘தஸ்கரவீரன்’, ‘ராப்பகல்’ என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இப்போது மூன்றாவது முறையாக மெகா ஸ்டாருடன் ஜோடி சேர்கிறார்.

அந்தவகையில் 2010ல் சித்திக் இயக்கிய பாடிகார்ட் படத்தில் நடித்த நயன் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மலையாளத்தில் நுழைகிறார். தாய் மொழியாக இருந்தாலும் சம்பளம் குறைவு என்பதால் கால்ஷீட்டை காரணம் காட்டி மலையாளப் படங்களை தவிர்க்கும் நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா இத்தனை பிசியிலும் மலையாளத்தில் நடிக்க சம்மதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE