இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக பேசப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றார்.

95

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக பேசப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றார்.

கொழும்பு 2, முத்தையா பார்க்கில் இன்று இன்று மாலை நடைபெற்ற தூய்மையான நாளைக்கான தேசிய சபையின் கூட்டத்திலேயே மங்கள சமரவீர பங்கேற்றார்.

இந்தக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மாதுளுவாவே சோபித தேரர், சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர்,  முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இதில் பங்கேற்கவில்லை.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான கூட்டம் ஒன்று சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றியவர்கள், அத்துரலியே ரத்தன தேரர் போன்றோர் மேலைத்தேயத்தினருக்கு அடிமையாகியுள்ளதாக குற்றம் சுமத்தினர்.

 

SHARE