30 திருமணங்கள் செய்த 24 வயது கில்லாடி இளைஞர்

126
 

24 வயதில் 30 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்ததாக இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (24). இவர் பொறியியலில் படிப்பை கைவிட்டு, பெற்றோருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். வேலை கிடைக்காமல் ஊர் சுற்றி கொண்டிருந்த சசிகுமார், இணையதளங்களில், தான் ஒரு சாப்ட்வேர் பொறியாளர் என்றும், பெற்றோர் வெளிநாட்டில் உள்ள னர் என்றும் கூறியுள்ளார்.

விவாகரத்தான பெண்களை குறிவைத்து தொடர்பு கொண்டார். பின்னர் அவர்களோடு ஊர் சுற்றுவதோடு அவர்களிடம் இருந்து பணம், நகை, விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்களை ‘பரிசாக’ பெற்று திருமணம் செய்து கொள்வார். பின்னர் சிறிது நாட்களி லேயே அந்த பெண்ணிடம் சண்டை போட்டு பிரிந்து சென்று விடுவார் என்று தெரிகிறது. இதேபோன்று சசிகுமார் பெங்களூரு, ஹைதராபாத்தில் 30 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட் டுள்ளது. 700 க்கும் மேற்பட்ட பெண்களை திருமண இணைய தளம் மூலம் தொடர்பு கொண்டு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஹைதராபாத் அருகே உள்ள ஜூலபல்லி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகினார். அவரது சகோதரிக்கு பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 1.5 லட்சம் வாங்கி ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக சகோதரிகள் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தனர். உதவி ஆணையர் ஜெயராம் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் போலீஸார் நேற்று இவருடன் தொடர்புள்ள ஒரு பெண்ணின் உதவியுடன் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் வரவைத்தனர். பின்னர் அவரை சைபராபாத் போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூரை சேர்ந்த விதவை பெண் ஒருவரை ஏமாற்றி ரூ. 3 லட்சம் மோசடி செய்துள்ளதும், பெண் நிருபரையும் மோசடி செய் துள்ளதும் உட்பட சசிகுமாரின் பல மோசடிகள் போலீஸ் விசார ணையில் தெரிய வந்தது. இவர் மீது பெங்களூரில் பல்வேறு வழக்கு கள் நிலுவையில் இருந்தாலும் இதுவரை போலீஸில் பிடிபட வில்லை. சசிகுமார் கைது செய்யப் பட்ட தகவலை ஹைதராபாத் போலீஸார் பெங்களூரு போலீஸா ருக்கு தெரிவித்தனர்.

சென்னை போலீஸ் எச்சரிக்கை

சென்னை சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த மோசடி குறித்து கூறியதாவது:

இதுபோன்ற ஆண்களின் வலை யில் கணவனை இழந்த பெண்கள், விவாகரத்தான பெண்கள் மற்றும் கணவருடன் பிரச்சினை உள்ளவர் கள், வயது கோளாறில் இளம்பெண் கள் சிக்கிக் கொள்கின்றனர்.

பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் ஆண்கள், பெரும்பாலும் தான் ஓர் அனாதை, என்னுடைய அம்மா, அப்பா வெளிநாட்டில் உள்ளனர் என்றே தெரிவிக்கின்றனர்.

அதனால் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது, பையன் வேலை செய்யும் இடம், நண்பர்கள், உறவினர்கள், வீட்டின் அருகே வசிப்பவர்கள் மற்றும் அவரது சொந்த ஊருக்கு சென்று நன்றாக விசாரிக்க வேண்டும்.

SHARE