14 வயதுச் சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்திய சமுா்த்தி உத்தியோகத்தா்

144
14 வயதுச் சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட சமுா்த்தி அலுவலா் – காட்டிக் கொடுத்த மழை

பளைப் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றினுள் வைத்து 14 வயதுச் சிறுவனுடன் பாலியலுறவு மேற்கொண்டிருந்த போது  அந்த இடத்தில் வைத்தே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் சமூா்த்தி அலுவலா் ஒருவா்.

தெருவால் உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மழை பெய்த போது ஒரு மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளனா்.

அப்போது அந்த மரத்திற்குச் சற்றுத் தொலைவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்கவே சந்தேகமடைந்த பொலிசார் அப்பகுதிக்குச் சென்ற போது அங்கு  ஒரு கட்டடத்தினுள் சிறுவன் ஒருவனைப் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஒருவரை பொலிசார் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனா்.

குறித்த நபரை விசாரித்த போது அவா் அப்பகுதி சமுா்த்தி உத்தியோகத்தா் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த அலுவலரையும் சிறுவனையும் கைது செய்த பொலிசார் அவா்களை பொலிஸ்நிலையம் கொண்டு சென்று பின்னா் கிளிநொச்சி நீதிமன்றில் ஆயா்படுத்தினா்.

சிறுவனை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனா்.

 

SHARE