32 வயது இளம் பெண்ணே சாவகச்சேரியில் பிடிக்கப்பட்ட விபச்சாரக் கும்பலுக்குத் தலைவி…

137
சாவகச்சேரியில் பிடிக்கப்பட்ட விபச்சாரக் கும்பல் – 32 வயது இளம் பெண்ணே தலைவி

சாவகச்சேரிப் பகுதியில் விபச்சாரக் கும்பல் ஒன்றைப் பொலிசாா் கைது செய்துள்ளனா். இக் கும்பலுக்குத் தலைவியாக இளம் பெண் ஒருவா் தலைமைதாங்கியுள்ளது அதிா்ச்சியளிப்பதாகத் தெரியவருகின்றது.

இக் கும்பலின் தலைவியான இளம் பெண் கொடுத்த தகவலின் பெயரில் புத்துா் பகுதியில் இயங்கிய விபச்சார விடுதியும் சுன்னாகம் பகுதியில் இயங்க விபச்சார விடுதியும் பொலிசாரால்  சீல் வைத்து மூடப்பட்டது.

சாவகச்சேரியில இயங்கிய விபச்சார விடுதி சாவகச்சேரிப் பொலிசாரின் அனுசரனையுடனேயே இயங்கி வந்ததாகவும் இது தொடா்பாக சாவகச்சேரி நீதவான் சிறிநிதி நந்தசேகரனுக்கு கிடைத்த தகவலையடுத்து அவா் விடுத்த உத்தரவின் பேரில் கொடிகாம் பொலிசாா் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த விடுதியில் இருந்த 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் கொழும்பு பம்பலப்பிட்டியைச் சோ்ந்த பெண்ணும் பிடிபட்டுள்ளாா்.

குறித்த விடுதியில் பிடிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலிலேயே ஏனைய விடுதிகளும் சுற்றிவளைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

 

SHARE