இலங்கையில் நீதியை சாகடித்த ராஜபக்சே- மூன்றாவது முறை போட்டி:

158
News

 

இலங்கையின் நீதித்துறை காட்டிக்கொடுப்புக்கு உள்ளாகியுள்ளது! ஹிட்லர் ஷீரோவாகி போனார்..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் இலங்கையின் அரசியல் அமைப்பை பாதுகாப்போம் என்ற உறுதிமொழிக்கு இணங்கவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

எனினும் நடப்பு ஜனாதிபதி மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்று மொஹான் பீரிஸ் வழங்கியுள்ள தீர்ப்பு மூலம் அரசியல் அமைப்பு கடுமையாக மீறப்பட்டுள்ளது.

மொஹான் பீரிஸை பொறுத்தவரையில் அவர் இலங்கையின் பிரதம நீதியரசருக்கு வெற்றிடம் இல்லாத நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை வெளியேற்றிவிட்டு பதவியில் அமர்த்தப்பட்டவர்.

எனவே அவரின் தலைமையிலான நீதியரசர் குழுவினால் வழங்கப்படும் எந்தத் தீர்ப்பும் வலுவற்றதாகவே கருதப்படவேண்டும். இல்லையேல் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் உயர்நீதிமன்றத்தில் மதிப்பு இல்லாமல் போய்விடும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பொறுத்தவரையில் அவர் இரண்டாவது தடவை பதவிக்கான தேர்தல் பிரசாரத்தின் போது 3வது தடவையும் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மக்களிடம் அனுமதி கோரவில்லை.

பதவிக்கு வந்த பின்னரே அவர் 18வது அரசியலமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் மூன்றாம் முறை தேர்தல் போட்டிக்கும் தயாரானார்.

எனவே அது ஒரு சட்டத்துக்கு புறம்பான செயல் மாத்திரமல்ல. அரசியலமைப்பு மீறும் செயலாகும்.

இந்தநிலையில் ஜனாதிபதிக்கான பதவிக் காலம் முடிவடைய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கையில், ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது, சிந்தனையுள்ள பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும்.

ஜனாதிபதி மூன்றாவது தடவையாக போட்டியிடலாமா? என்று உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய போது சட்டத்தரணிகள் சங்கத்துக்கு எதிர்வாதத்தை முன்வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. இது ஏற்கனவே வரப்போகின்ற தீர்ப்பை அரசாங்கமும் பிரதம நீதியரசரும் தீர்மானித்து விட்டனர் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

ஜெர்மனின் வரலாற்றில் ஹீரோவாக போற்றப்பட்ட அடொல்ப் ஹிட்லர், தமது பிழையான நடத்தலால் ஷீரோவாகி போனமையை யாவரும் அறிவர்.

அதேநேரம் தற்போது உயிருடன் உள்ள பர்கினோ பாஸோ மூன்றாம் தடவை ஜனாதிபதியாக விரும்பி இன்று நாட்டில் இருந்து வெளியேறி வாழவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

அதற்கு எதிர்மாறாக இலங்கையின் நட்பு நாடான கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோ,  உரிய நேரத்தில் தமது பதவியில் இருந்து விலகியதன் மூலம் இன்று தேசிய தலைவராக போற்றப்படுகிறார்.

 

SHARE