இந்திய உயர்ஸ்தானிகர், சந்தித்தமையை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முடியாது

154
இந்திய உயர்ஸ்தானிகர், சந்தித்தமையை சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளார்!
தாம்,  இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வந் சிங்ஹா, சம்பந்தனையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன

இந்த சந்திப்பு சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த சந்திப்பை சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் இது வழமையான சந்திப்பு மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைப்பற்றி ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE