ஹொலிவூட்டில் டென்னிஸ் வீராங்கனை

82

மகளிர் டென்னிஸ் சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு இருந்து வந்தவர் சானியா மிர்சா.

டென்னிஸில் பல சாதனைகளை புரிந்த சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சொயப் மாலிக்கை காதலித்து திருமணம் புரிந்தார். தற்போது இவர் டென்னிஸில் கலக்கியது போல் சினிமாவில் களம் இறங்க இருக்கிறார்.

ஆனால் தமிழில் இல்லை, ஹாலிவுட்டில். ‘ஸ்கைஃபால்’ படத்திற்கு பிறகு அடுத்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாண்ட் 24’ படத்தில் நடித்து வருகிறார் சானியா மிர்சா.

இதுகுறித்து சானிமா மிர்சா தனது டிவிட்டர் பக்கத்தில், தினமும் அவதார் பாண்டிங், அட் தி ஷுட்டிங் என பாண்ட் 24 படத்தை பற்றிய செய்திகளை போட்டு வருகிறார்.

 

SHARE