கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் குறைபாடு

 

கூகுள் நிறுவனம் தானியங்கி கார்களை வடிவமைப்பதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (Artificial Intelligence) உருவாக்கியிருந்தது.

இந்த தொழில்நுட்பம் எதிரே உள்ள பொருட்களையும் இனங்காணக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருபரிமாண உருக்களை மட்டுமன்றி முப்பரிமாண உருக்களையும் இனங்காணக்கூடியதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தொழில்நுட்பம் தொடர்ச்சியாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடைப்படையில் ஆமையை இனங்காண்பதற்கான பரிசோதனையை மேற்கொண்ட போது அது ஒரு துப்பாக்கி என இனங்காட்டியுள்ளது.

இது ஒரு பாரிய குறைபாடாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Thinappuyal News