மொழி பெயர்ப்பு செய்யும் புதிய கருவி

 

 

ஆங்கிலத்தில் கூறும் குரல் கட்டளைகளை ஏற்று அதனை பிற மொழிகளில் மொழி பெயர்த்து தரும் நவீன ரக மொழிபெயர்ப்பு கருவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தப் புதிய கருவியை கொரிய நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘இலி’ என்று பெயரில் பென் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்ட ‌இந்தக் கருவி ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை ஏற்று, அதற்குரிய சீன,‌ ஜப்பான் மற்றும் ஸ்பானிஷ் சொற்களை ஒலி வடிவில் வெளியிடுகிறது.

மொழிப் பெயர்ப்புக்கான மொபைல் செயலிகள் அதிகம் உள்ள நிலையிலும், ‘இலி’ டரான்ஸ்லேட்டர் கருவியின் செயல்பாடு சற்று வித்தியாசமானது எனவும் இந்தக்கருவியை பயன்படுத்துவதற்கு இணைய வசதி என்பது தேவையில்லை என்றும், 2 நொடிகளில் மொழிப்பெயர்பை கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

USB கேபிள் மூலம் இதன் பெட்டரியை ரீச்சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பதுடன் ஒரு நாளில் 10 நிமிடங்கள் வரை மட்டும் பயன்படுத்தும் பட்சத்தில், இதன் பேட்டரியை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கருவியில் குறிப்பிட்ட மூன்று மொழிகளில், ஏதேனும் ஒன்றில் மட்டுமே மொழிமாற்றம் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது எனவும் மேலும் சிறிய வார்த்தைகளை மட்டுமே இதன் மூலம் மொழி மாற்றம் செய்ய முடியும் எனவும் குறித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

About Thinappuyal News