பிரேசில் அசத்தல் வெற்றி

114
துருக்கியில் இஸ்தான்புலில் நடந்த நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில் பிரேசில், துருக்கி அணிகள் மோதின.இதில் அசத்தலாக ஆடிய பிரேசில் அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பிரேசில் அணி சார்பில் நெய்மர் 2 (20, 60வது நிமிடம்), வில்லியன் ஒரு (44வது) கோல் அடித்தனர். துருக்கியின் கயா (24வது நிமிடம்), சேம் சைடு கோல் அடித்தார்.

இதேவேளை, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடந்த போட்டியில் நெதர்லாந்து, மெக்சிகோ அணிகள் மோதின.

இதில் நெதர்லாந்து அணி 2–3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. நெதர்லாந்து சார்பில் ஸ்னெய்டர் (49வது நிமிடம்), பிலைண்டு (74வது) தலா ஒரு கோல் அடித்தனர். மெக்சிகோ அணிக்கு வேலா (8, 62வது நிமிடம்), ஹெர்ணான்டஸ் (69வது) கைகொடுத்தனர்.

SHARE