தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையை கட்டி எழுப்புங்கள் அபிவிருத்திகளோடு நாங்கள் வருகின்றோம். வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர்.

127
மன்னார் தாராபுரம் கிராமத்தில் 13-11-2014 வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் ஆரம்ப தாய் சேய் சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அல்ஹாஜ் ரிப்கான் பதியுதீன் அவர்களின் அழைப்பின் பேரில்  கலந்து கொண்ட வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது உரையில் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
2
நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அல்ஹாஜ் ரிப்கான் பதியுதீன் அவர்களும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் திருமதி சிசில் அவர்களும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திரு ரூபன் அவர்களும் மற்றும் கிராமத்தலைவர்கள் கிராம மக்கள் வைத்தியர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE