ஆப்கானிஸ்தானில் பராஹ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை தாலிபான்கள்  தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்கள்வரை மேற்கொண்ட தாக்குதலில் சோதனைச் சாவடியிலிருந்த 8 பொலிஸார் பலியாகியுள்ளனர்.

அமெரிக்க அதிபரான ட்ரம்ப் ஆப்கனில் உள்ள அமெரிக்கப் படைகள் குறைக்கப்படும் என்று   கூறியுள்ள நிலையிலும்  ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறாமல் இருப்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாலிபான்கள் தொடர்ந்து ஆப்கான் அரசுப் படைகள் மற்றும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.