விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிவந்த பல கப்பல்கள், அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினரால் இனம்காணப்பட்டுப் பின்னர் இலங்கைக்குத் தகவல் வழங்கப்பட்டதாகவும். பசுபிக் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க கடற்படையினர் பல தகவல்க

 வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் இலங்கைக்கு மிகுந்த உறுதுணையாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின்றன.

விடுதலைப் புலிகளோடு நடைபெற்ற போரில் இலங்கை அரசுக்கு அமெரிக்க இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் பல வழிகளில் ஆதரவினை வழங்கியதாக அரசாங்கத் ஆதரவின் கீள் இயங்கிவரும் நாழிதள் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. அந்த ஆங்கில நாழிதளில் பல செய்திகள் இதுகுறித்து வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிவந்த பல கப்பல்கள், அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினரால் இனம்காணப்பட்டுப் பின்னர் இலங்கைக்குத் தகவல் வழங்கப்பட்டதாகவும். பசுபிக் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க கடற்படையினர் பல தகவல்களை வழங்கிவந்ததாகவும் அது மேலும் தெரிவித்துள்ளத்து.

இலங்கை போன்ற நாடுகளிடம், கடலை நெடுந்தூரம் கண்காணிக்கும் அதிசக்திவாய்ந்த ராடர்கள் இருந்திருக்கவில்லை. எனவே வேறு ஒரு வல்லரசின் உதவியின்றி புலிகளின் ஆயுத வினியோகக் கப்பலை இலங்கை அரசால் தாக்கியிருக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.

போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை, முள்ளிவாய்க்காலில் உள்ள மக்களை அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய படையணி காப்பாற்றும் என்ற கட்டுக்கதைகளும், சிங்கள இனவாதிகளால், திட்டமிட்டே பரப்பப்பட்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கவிடையமாகும்.

ஒரு நாடு நிச்சயம் தலையிட்டு யுத்தநிறுத்தம் ஒன்றைக்கொண்டுவரும் என இறுதிநேரத்தில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் நம்பியிருந்தனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந் நிலையில் குறிப்பிட்ட எந்த ஒரு நாடு இந்தியாவை மீறிச் செயல்பட விரும்பவில்லை என்பதே இறுதியில் கூறப்பட்ட காரணமாக அமைந்தது.

2007ம் ஆண்டு புலிகளின் ஆயுதக் கப்பல்